Asianet News TamilAsianet News Tamil

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வேர்க்கடலை குழம்பு!

வாருங்கள்!சுவையான வேர்க்கடலை குழம்பினை வீட்டில் சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Ground nut Gravy in Tamil
Author
First Published Dec 6, 2022, 5:35 PM IST

வேர்க்கடலை வைத்து சட்னி,வடை ,மசாலா சாட், பர்பி,லட்டு என்று பல விதமான ரெசிபிஸ் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வேர்க்கடலை வைத்து சுவையான குழப்பு செய்துள்ளீர்களா? இல்லையா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். 

இந்த வேர்க்கடலை குழம்பு இட்லி,தோசை,சாதம் ,சப்பாத்தி என்று அனைத்திற்கும் நல்ல ஒரு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் வேர்க்கடலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்க கூடிய உணவு வகைகளில் ஒன்றாகும்.

வாருங்கள்!சுவையான வேர்க்கடலை குழம்பினை வீட்டில் சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

வேர்க்கடலை - 1/2 கப் 
தேங்காய் - 1/4 முடி 
புளிக்கரைசல்
கடுகு - 1 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
சீரகத்தூள் -1 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை- 1 கொத்து 
பெருங்காய  தூள்-2 சிட்டிகை
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய்- தேவையான அளவு

'ஃப்ரைடு பரோட்டா'' இனி கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் வேர்க்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு , தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊறிய வேர்க்கடலையை குக்கரில் மாற்றி சிறிது உப்பு சேர்த்து , அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

புளியை தண்ணீரில் ஊற வைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பின் அதில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய் தூள், சீரகத்தூள், மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

பின் அதில் வேக வைத்துள்ள கடலையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொஞ்சம் கொதித்து,வாசனை வரும் போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து,அதில் சிறிது எண்ணெய் சேர்த்து,எண்ணெய் சூடான பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு அதனை குழம்பில் சேர்த்து ஒரு முறை கலந்து விட வேண்டும்.

இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வேர்க்கடலை குழம்பு ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios