Asianet News TamilAsianet News Tamil

இட்லி என்றால் இனிமே எள்ளு சட்னி தான் வேண்டும் என்பார்கள் !

வாருங்கள்! ருசியான எள்ளு சட்னியை வீட்டில் எளிமையாக எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

How to prepare Sesame Chutney in Tamil
Author
First Published Jan 8, 2023, 5:29 PM IST

தினமும் இட்லி,தோசை போன்றவற்றிக்கு பூண்டு சட்னி,கார சட்னி,தேங்காய் சட்னி,சாம்பார் என்று செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் மாற்றாக, சுவையாக, புதுமையாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்போ இந்த சட்னியை செய்து பாருங்க.
சுவையான எள்ளு சட்னியை ஒரு முறை செய்து பாருங்க. பின் இதனை அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இதனை இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமா இருக்கும்.

வாருங்கள்! ருசியான எள்ளு சட்னியை வீட்டில் எளிமையாக எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

எள்ளு - 1/4 கப்
தேங்காய் - 1/2 கப்
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
வரமிளகாய் - 7
புளி - 1 லெமன் சைஸ்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு-1 /2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

வெறும் 3 பொருட்களை வைத்து ஈஸியான வற்றல் செய்யலாம் வாங்க!

செய்முறை:

தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.

எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு குளிர செய்ய வேண்டும். கடாயில் இருக்கும் கலவை நன்றாக ஆறிய பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்ததை சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு சட்னி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios