Asianet News TamilAsianet News Tamil

வெறும் 3 பொருட்களை வைத்து ஈஸியான வற்றல் செய்யலாம் வாங்க!

வாருங்கள்! புளிப்பான சுவையில் மாங்காய் வற்றல் எப்படி வீட்டில் செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

 

How to do Raw Mango Vatral recipe in Tamil
Author
First Published Jan 6, 2023, 5:24 PM IST

வழக்கமாக மாங்காய் வைத்து சுவையான மாங்காய் சட்னி, மாங்காய் சாதம், மாங்காய் ஊறுகாய் என்று பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் மாங்காய் வைத்து மிக எளிமையான ஒரு ரெசிபியை செய்யலாம் வாங்க.

மாங்காய் வைத்து மிக குறைந்த நேரத்தில் எளிமையான ரெசிபியான வற்றல் செய்யலாம். காய்ச்சல் என்றால் கஞ்சி வைத்து பருகுவோம். அப்போது இந்த வற்றலையும் பொரித்து சாப்பிட்டால் நாவிற்கு சற்று நன்றாக இருக்கும்.இது காய்கறிகள் இல்லாத நேரத்தில், எங்கேனும் அவச வேலையாக வெளியே செல்ல வேண்டிய சமயங்களில் இந்த வற்றலை வறுத்து சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம்.

இதனை ஒரு முறை செய்தால், நீண்ட நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இது கொஞ்சம் புலிப்பாக இருப்பதால் பெரியவர்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் . அனைத்து சீசனிலும் மாங்காய்  கிடைக்காது என்பதால் இந்த மாதிரி செய்து வைத்தால் நாம் எப்போது வேண்டுமானாலும்  இதனை வறுத்து சாப்பிடலாம்.

வாருங்கள்! புளிப்பான சுவையில் மாங்காய் வற்றல் எப்படி வீட்டில் செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
 

செய்முறை:

முதலில் பிரெஷ்ஷான மாங்காய்களை வாங்கி வந்து அல்லது பறித்து வந்து அதனை நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை துடைத்து நிழலில் போட்டு காய வைக்க வேண்டும். பின் மாங்காய்களை ஒரே மாதிரியான அளவில் துண்டுகளாக செய்து அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிந்த மாங்காய் துண்டுகளை ஒரே பெரிய அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின் மாங்காய் பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு மூன்று முறை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும். அதனை அப்படியே இரண்டு நாள் வைத்து விட வேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு, மூன்றாம் நாள் உப்பானது மாங்காயில் நன்றாக ஊறி இருக்கும்.

அந்த நீரை நன்றாக வடித்து விட்டு அதனை பெரிய தட்டுகளில் மெட்ரிக் கொள்ள வேண்டும். மாங்காய் உள்ள தட்டுகளை வெயிலில் வைத்து காய வைக்க வேண்டும். பின் மீண்டும் அதே உப்பு நீரில் சேர்த்து மீண்டும் நீரை வடித்து காய வைக்க வேண்டும்.

இதே முறையில் வாரம் வரை செய்து மாங்காயில் இருக்கும் அனைத்து தண்ணீரும் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆகும் வரை செய்ய வேண்டும். சுக்கு போல் ஆன பிறகு, அதனை பக்குவமாக ஒரு எவர் சில்வர் பாக்ஸில் அல்லது காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios