Asianet News TamilAsianet News Tamil

மங்களூர் ஸ்டைல் உருளைக்கிழங்கு கூட்டு தெரியுமா? வாங்க பார்க்கலாம்!

இன்று நாம் மங்களூர் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கூட்டு ரெசிபியை வீட்டில் எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to prepare Mangalore Potato curry in Tamil
Author
First Published Nov 16, 2022, 8:37 PM IST

வழக்கமாக நாம் கூட்டு என்றால் கீரை பருப்பு கூட்டு, புடலங்காய் கூட்டு, சௌ சௌ கூட்டு என்று தான் செய்திருப்போம். இன்று நாம் சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கு வைத்து ஒரு கூட்டு செய்யலாமா? என்ன? உருளைக்கிழங்கில் கூட்டா ? என்று பார்க்கிறீர்களா? வாங்க அதனை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக உருளைக்கிழங்கு வைத்து உருளைக்கிழங்கு வறுவல், பொரியல், பொடிமாஸ், மசாலா,குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இன்று நாம் மங்களூர் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கூட்டு ரெசிபியை வீட்டில் எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ 
 வெங்காயம் - 1 
தக்காளி - 1 
கடுகு- 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன் 
தேங்காய் துருவல் -  4 ஸ்பூன் 
கசகசா - 1/4 ஸ்பூன் 
சோம்பு - 1/4 ஸ்பூன் 
புளி - லெமன் சைஸ் 
மல்லித்தழை - 1 கையளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

ராஜஸ்தான் புகழ் "தால் பஞ்சாரா " வீட்டிலேயே செய்யலாமா!

செய்முறை: 

முதலில் உருளைக் கிழங்கை அலசி விட்டு,பின் ஒரே மாதிரியான அளவில் அரிந்து கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு குக்கர் வைத்து,உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 2 விசில் வரும் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயம் மற்றும் தக்காளியை பிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

மிக்சி ஜாரில் துருவிய தேங்காய்,சோம்பு,கசகசா ஆகியவற்றை சேர்த்து,சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடான பின், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.பின் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு,அடுத்து தக்காளி சேர்த்து,தக்காளி மசியும் வரை வதக்கிய பின்பு,கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். 

இப்போது கடாயில் மிளகாய்த் தூள்,மல்லித் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கிளறி விட வேண்டும்.பின் வேக வைத்துள்ள உருளை சேர்த்து,1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதித்து கொஞ்சம் கெட்டியாக மாறிய பிறகு,அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.பின் இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மங்களூர் ஸ்டைல் உருளைக்கிழங்கு கூட்டு ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios