Asianet News TamilAsianet News Tamil

ராஜஸ்தான் புகழ் "தால் பஞ்சாரா " வீட்டிலேயே செய்யலாமா!

ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற தால் பஞ்சாராவை வீட்டில் எப்படி சுவையாக, சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to prepare Rajasthani Dal Banjara in Tamil
Author
First Published Nov 15, 2022, 4:19 PM IST

வழக்கமாக சப்பாத்திக்கு நாம் செய்கின்ற உருளை குருமா, பட்டாணி குருமா,வெஜ் குருமா செய்வதற்கு பதிலாக சற்று மாற்றமாக ஒரு ரெசிபியை நாம் இங்கு காண உள்ளோம். 

தால் பஞ்சாரா என்று அழைக்கப்படும் இது வட இந்தியாவின்,குறிப்பாக ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற இந்த ரெசிபியில் கருப்பு உளுந்து சேர்த்து செய்யப்படுவதால் உடலுக்கு தேவையான சக்தியை நமக்கு தருகிறது. எப்போதும் செய்கின்ற கிரேவியை செய்யாமல் இந்த தால் பஞ்சராவை ஒரு முறை செய்து பாருங்கள். 

ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற தால் பஞ்சாராவை வீட்டில் எப்படி சுவையாக, சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - 1/4 கப்
கடலைப் பருப்பு - 3 ஸ்பூன் 
வெங்காயம் - ஒன்று
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
பட்டை -1 இன்ச் 
கிராம்பு - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் 
நெய் - 2 ஸ்பூன் 
துருவிய இஞ்சி - 2 ஸ்பூன் 
கொத்தமல்லி - கையளவு 
உப்பு -தேவையான அளவு 

சத்தான வரகரிசி பருப்பு அடை செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் கருப்பு உளுந்தை அலசி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீரில் ஊற்றி, சுமார் 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். கடலை பருப்பினை அலசி வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, அதில் 2 பருப்புகளையும் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி,5 விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.விசில் அடங்கிய பின்னர், குக்கரை திறந்து பருப்புகளை நன்றாக மசித்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இஞ்சியை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து, நெய் சூடான பின், பட்டை, கிராம்பு, வர மிளகாய்,சேர்த்து வறுத்துக் கொண்டு, பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட்டு, பின் இஞ்சி- பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

இப்போது இந்த கடாயில், மசித்து வைத்துள்ள பருப்புகளை சேர்த்து கொஞ்சம் கிளறி விட வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். 

நன்றாக கொதித்த பின் துருவிய இஞ்சி மற்றும் மல்லித்தழையை தூவி இறக்கினால் தால் பஞ்சாரி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios