சூப்பரான சுவையில் "கொங்குநாடு சிக்கன் சிந்தாமணி" இப்படி செய்து பாருங்க!

சிக்கன் வைத்து ஒரு சேஞ்சாக கொங்குநாடு ஸ்டைலில் காரசாரமான சிக்கன் சிந்தாமணி ரெசிபியை செய்யலாம் வாங்க. 
 

How to prepare Kongu Nadu Chicken Chinthamani In Tamil

நாம் வழக்கமாக சிக்கன் வைத்து சில்லி சிக்கன், சிக்கன் கபாப், சிக்கன் கிரேவி, சிக்கன் குருமா என்று வரிசையாக நீண்டு கொண்டே போகும் சிக்கன் ரெசிபிஸ். 

அந்த வகையில் சிக்கன் வைத்து ஒரு சேஞ்சாக கொங்குநாடு ஸ்டைலில் காரசாரமான சிக்கன் சிந்தாமணி ரெசிபியை செய்யலாம் வாங்க. 

இதன் சுவையானது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசித்து சாப்பிடும் விதத்தில் அசத்தலாக இருக்கும். கொங்குநாடு ஸ்டைலில் காரசாரமான சிக்கன் சிந்தாமணயை எளிமையாகவும், சுவையாகவும் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
காய்ந்த மிளகாய் - 12 
சில்லி தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 
மல்லித்தழை- சிறிது 
உப்பு - தேவையான அளவு 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 

சளி, இருமலை விரட்டி அடிக்க - கல்யாண முருங்கை இலைபூரி !

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசிக் கொண்டு, தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் , கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட்டு, சிறிது உப்பு போட வேண்டும். வெங்காயம் நன்கு சாஃப்டாக மாறும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, இஞ்சி பூண்டின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிகொண்டு, பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சில்லி தூள் சேர்த்து கார வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். 

இப்போது இதில் அலசி வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொண்டு, கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வதக்கி கொள்ள வேண்டும்.
பின் 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, கடாயை ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 30 நிமிடங்கள் வரை சிக்கனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

சிக்கன் நன்றாக வெந்த பிறகு, துருவிய தேங்காயை சேர்த்து, 1 நிமிடம் அடுப்பில் வைத்து நன்றாக கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, பொடியாக வெட்டி வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் சுவையான சிக்கன் சிந்தாமணி ரெடி!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios