Asianet News TamilAsianet News Tamil

சளி, இருமலை விரட்டி அடிக்க - கல்யாண முருங்கை இலைபூரி !

நாம் கல்யாண முருங்கை இலை பயன்படுத்தி ஒரு வடை அல்லது பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

how to cook Kalyana Murungai Ilai Poori
Author
First Published Nov 4, 2022, 7:07 PM IST

தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தினாலும், மேலும் நம்மில் பலருக்கும் மழை மற்றும் குளிர் காலங்களில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் மிக விரைவாக பிறரிடம் இருந்து ஒட்டிக் கொள்கிறது. இதற்கு நாம் மருந்து,மாத்திரைகள் தராமல், உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப, உண்ணும் உணவையே மருந்தாக பயன்படுத்தி , இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். 

அந்த வகையில் இன்று நாம் கல்யாண முருங்கை இலை பயன்படுத்தி ஒரு வடை அல்லது பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் சேர்க்கப்படும் சுக்கு, சித்தரத்தை மற்றும் மிளகு ஆகியவை சளி மற்றும் இருமலை போக்கும் ஆற்றல் பெற்றதால் , இதனை நாம் வாரம் ஒரு முறையாவது செய்து கொடுக்கலாம் . இதன் சுவையானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இருக்கும். 

தேவையான பொருட்கள்:

கல்யாண முருங்கை இலை-15 இலைகள் 
பச்சரிசி - 200 கிராம்
சுக்கு பொடி-1/2 ஸ்பூன் 
மிளகு -1 ஸ்பூன் 
சித்தரத்தை-10 கிராம்
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய்-தேவையான அளவு 

Soya Beans Dosa : மாவு அரைத்து கஷ்டப்படாமல், சட்டென்று எளிமையாக ஆரோக்கியமான தோசை செய்யலாமா?

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு அலசி விட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கல்யாண முருங்கை இலைகளை நன்றாக அலசி விட்டு,அதன் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி விட்டு, இலைகளை சின்ன சின்னதாக அரிந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஊறிய அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொண்டு, அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரிந்து வைத்துள்ள இலை, மிளகு, சித்தரத்தை மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வடை அல்லது அடை பதத்திற்கு (கெட்டியாக) அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது சுக்கு பொடி தூவி பிசைந்து கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின், மாவினை கையில் எடுத்து சிறு உருண்டையாக செய்து கொள்ள வேண்டும். ஒரு பாலித்தீன் கவரில் சிறிது எண்ணெய் தடவி, உருண்டையை அந்த கவரில் போட்டு வடை போல தட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட்டு விட வேண்டும். இப்போது ,அடுப்பின் தீயினை சிம்மில்வைத்துக் கொள்ள வேண்டும். 

பூரிப் போன்று உப்பி வரும் போது, திருப்பி போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட கல்யாண முருங்கை இலை பூரி ரெடி! இதே போல் அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும். பின்அதனை எண்ணெய் இல்லாமல் வடி கட்டி விட்டு தட்டில் வைத்துக் கொடுங்கள்.அடுத்த நிமிடமே, தட்டில் வைத்தது காணாமல் போய் விடும்.இதன் மேல் பொடி தூவி சாப்பிட அருமையாக இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios