குளுகுளுவென " ஜில் ஜில் ஜிகிர்தண்டா " செய்து குடிப்போமா!

ஜிகர்தண்டா , இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும் மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவின் சுவையோ அலாதியாக இருக்கும்.

How to Prepare Jil JIl Jigarthanda in Tamil

தூங்கா நகரமான மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன், மதுரை மல்லி , மதுரை பன் பரோட்டா இந்த வரிசையில் மதுரையின் மிக பிரசித்தி பெற்றது ஜிகர்தண்டா. இது மதுரை பிரசித்தி மட்டுமல்லாது, உலக பிரசித்தி பெற்றதும் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு, இது மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி ஆகும்.

இந்த ஜிகர்தண்டா , இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும் மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவின் சுவையோ அலாதியாக இருக்கும். இதற்கென எப்பொழுதும் ஒரு கூட்டம் அடிமை என்றே கூறலாம். இதனை பிடிக்காது என்று சொல்லும் ஒருவரை கூட நம்மால் கண்டுபிடிக்க இயலாது. சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இதன் சுவை ஆபரமாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி எளிமையாக , சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்
நன்னாரி ஸிரப் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 8 ஸ்பூன்
ரோஸ் கலர் - 1 ஸ்பூன்
கடல் பாசி -25கிராம் 
சைனா கிராஸ் - 4 ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் - 1

ஆரோக்கிய நலன்களை வாரி வழங்கும் "பீட்ரூட் கட்லெட் " இன்றே செய்து சாப்பிடுங்க.

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு அடக்கனமான , விசாலமான பாத்திரம் ஒன்றை வைத்து அதில், ஒரு லிட்டர் பாலை ஊற்றி, (தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது) தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, பாலை கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்கும் போது ரோஸ் கலர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பாலை கிளறி விட வேண்டும். 

பாலானது நன்கு கொதித்து பாதியாக சுண்டி வரும் போது, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் உள்ள பாலை ஒரு சிறிய பௌலில் ஊற்றிக் கொண்டு, அதனை ஆற வைத்து விட்டு, பிரிஜ்ஜில் சுமார் 5 மணி நேரங்கள் வைத்து விட வேண்டும். 

அரைத்த மசாலாவின் வாசனையில் கமகமவென்று வீடே மணக்கும் "சேலத்து மீன் குழம்பு" செய்யலாம் வாங்க

அடுப்பில் ஒரு கிண்ணத்தில் சைனாகிராஸை சிறிது எடுத்து, கொதிக்க விட்டு, இறக்கி விட்டு சுமார் 2 மணி நேரம் வரை அப்படியே வைத்து விட வேண்டும். 2 மணி நேரம் சென்ற பிறகு , சைனா க்ராஸ் ஜெல்லி போல மாறி இருக்கும். அதனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொண்டு, பிரிஜ்ஜில் கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் வரை வைத்து குளிர வைக்க வேண்டும். 

பின் பிரிட்ஜில் உள்ள குளிர்ந்த பாலை எடுத்து ஒரு, க்ளாசில் பாதியளவு ஊற்றிக் கொண்டு, ஜெல்லிகள் போலிருக்கும் சைனா கிராஸ் துண்டுகளைப் போட வேண்டும். இறுதியாக பாலின் மேல் நன்னாரி ஸிரப் மற்றும் ரோஸ் ஸிரப்,ஊற்றி, அதன் மேல் ஐஸ்கிரீம் ஸ்கூப்பை பரவிட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள். அவ்ளோதான் சுவையான ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios