Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கிய நலன்களை வாரி வழங்கும் "பீட்ரூட் கட்லெட் " இன்றே செய்து சாப்பிடுங்க.

பீட் ரூட் வைத்து இன்று நாம் சத்தான பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

How to prepare Beetroot Cutlet in Tamil
Author
First Published Nov 8, 2022, 4:11 PM IST

நாம் வழக்கமாக மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா, புட்டு, வடை என்று பல விதமான ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிட்டு இருப்போம்.அதன் வரிசையில் கட்லெட் கூட இரு தனித்துவனுமான இடத்தை பிடித்துள்ளது. 

வெஜ் கட்லெட், சிக்கன் கட்லெட், கார்ன் கட்லெட், கிராப் கட்லெட், பன்னீர் கட்லெட் என்று பல விதமான கட்லெட் வகைகள் இருக்கிறது.அந்த வகையில் இன்று நாம் ஆரோக்கியத்தை வாரி வழங்குகின்ற பீட் ரூட் வைத்து சுவையான பீட் ரூட் கட்லெட் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் காய்கறிகளில், ஒன்றான பீட்ரூட் வைத்து நாம் ஒரு ரெசிபியை காண உள்ளோம். பீட்ரூட் பல விதங்களில் நமக்கு நன்மைகளை தருகின்றன. அந்த வகையில் பீட்ரூடானது , உடல் பருமன், சோர்வு , மலசிக்கல் போன்ற உபாதைகளை நீக்கி, உடலுக்கு வலிமையை தருகிறது. 

மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்யும் பணி செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது, உயர் அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இன்னும் எண்ணில் அடங்கா நன்மைகளை பீட்ரூட் வாரி வழங்குகிறது. அத்தகைய பீட் ரூட் வைத்து இன்று நாம் சத்தான பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

குட்டிஸ்கள் விரும்பும் "மஸ்ரூம் சீஸ் பாப்பர்ஸ்" -தட்டில் வைத்த அடுத்த நிமிடம் காலி ஆகி விடும்!

How to prepare Beetroot Cutlet in Tamil

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 2
வெங்காயம் - 1
வாழைக்காய் - 1
ப்ரெட் க்ரம்ஸ் - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மல்லித் தூள் -2 சிட்டிகை 
சீரக தூள் -2 சிட்டிகை 
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
ஆம்சூர் பவுடர்- 2 சிட்டிகை 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
மல்லித்தழை - கையளவு 
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Mutton Kadai Recipe : பன்னீர் கடாய் தெரியும். அதென்ன ''மட்டன் கடாய்''! வாங்க செய்யலாம்!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் வாழைக்காயை தோலுடன் போட்டு, 3/4 பதத்திற்கு வேக வைத்துக் கொண்டு, ஆறிய பிறகு, அதனை தோலுரித்து சீவிக் கொள்ள வேண்டும். பின் பீட்ரூட்டை அலசிவிட்டு, அதனையும் துருவி வைத்துக் கொண்டு, பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.அரிந்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, சூடான பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். அதன் பிறகு, துருவிய பீட்ரூட் சேர்த்து சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு, பின் சீரகத்தூள், மஞ்சள் தூள்,ஆம்சுர் பவுடர், கரம் மசாலா தூள், மிளகாய்தூள்,மல்லித்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 

மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் அதில் துருவிய வாழைக்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, அடுப்பை ஆஃப் செய்து விட்டு, இறக்கி விட வேண்டும். பின் ப்ரெட் க்ரம்ஸ், கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து பிடித்த வடிவத்தில் தட்டிக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி , கட்லெட்டை போட்டு, அடுப்பினை சிம்மில் வைத்து ஒவ்வொரு பக்கமும் சிவக்கும் வரை வேக விட வேண்டும். திருப்பி போடும் போது சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். அவ்ளோதாங்க சத்தான பீட்ரூட் கட்லெட் ரெடி!!! சாஸ் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதனை இன்றே ட்ரை பண்ணி பாருங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios