நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையான பட்டர் சிக்கன் மசாலா!

இன்று நாம் சிக்கன் ரெசிப்பிகளில் ஒன்றான பட்டர் சிக்கன் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காண உள்ளோம்.

How to prepare Butter Chicken recipe in Tamil

அசைவ பிரியர்கள் அனவைருக்கும் பிடித்த ஒரு உணவு வகை என்றால், சிக்கன் தான்.சிக்கன் வைத்து சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் லாலி பாப், சிக்கன் பிரியாணி, சிக்கன் மன்ச்சூரியன் என்று சிக்கன் வைத்து எதை செய்து கொடுத்தாலும், அதை அப்படியே சத்தமில்லமல் சாப்பிடுவார்கள் அசைவப்பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் ரெசிப்பிகளில் ஒன்றான பட்டர் சிக்கன் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காண உள்ளோம்.

சிக்கனில் ப்ரோட்டீனும் ,பட்டரில் விட்டமின் A சத்தும் அதிகமாக உள்ளது. இதை இரண்டையும் ஒரே சேர சேர்த்து சமைப்பதால், நமக்கு தேவையான சத்தும் ,சுவையும், ஆரோக்கியமும் இரட்டிப்பாக கிடைக்கிறது. ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கக் கூடிய இந்த பட்டர் சிக்கன் தோசை, நாண் ,புல்கா , பரோட்டா என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் சுவை ஆபராமாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகள், இளைஞர்கள் , வயதானவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

குளுகுளுவென " ஜில் ஜில் ஜிகிர்தண்டா " செய்து குடிப்போமா!

தேவையான பொருட்கள்

போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 4
தயிர் – 200 மிலி
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன் 
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பட்டர் – 50 கிராம்
முந்திரி பேஸ்ட் - 2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 ஸ்பூன் 
சிவப்பு நிறம் - 1/2 ஸ்பூன்
பட்டை- 1 இன்ச் 
கிராம்பு-3 
ஏலக்காய் – 2
பிரெஷ் கிரீம்- 2 ஸ்பூன் 
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 

கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும் "கொள்ளு குருமா"!

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து விட்டு, நன்றாக அலசிக் கொண்டு, தண்ணீரை வடிகட்டி கொண்டு, ஒரு விலாசமான பாத்திரத்தில் கெட்டி தயிர், உப்பு, கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி மற்றும் சிவப்பு நிறம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து,தக்காளி விழுது எடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்த பாத்திரத்தில் உள்ள தயிர் கலவையில் கழுவி வைத்துள்ள சிக்கன் பீஸ்களை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, அதில் ஊற வைத்த சிக்கன் சேர்த்து தண்ணீர் ஊற்றி, அடுப்பின் தீயை மிதமாக வைத்து, 2 விசில் வரும் வரை சிக்கனை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் பட்டர் சேர்த்து, பட்டர் உருகிய பின், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொண்டு, பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

பின் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த் தூள்,மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொண்டு வதக்கி கொள்ள வேண்டும். பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.

கடாயில் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு, முந்திரி விழுது சேர்த்து இறக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ,அதன் மேல் சிறிது பிரெஷ் கிரீம் ஊற்றி கார்னிஷ் செய்தால், வீட்டிலேயே சூப்பரான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன் கிரேவி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios