Bombay Halwa : சுவையான பாம்பே ஹல்வா 10 நிமிஷத்தில் செய்து அசத்தலாம் வாங்க!

இன்றைய பதிவில் சுவையான பாம்பே ஹல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்க உள்ளோம். 

How to prepare Bombay Halwa in Tamil

வாயில் போட்டவுடன் கரையும் பாம்பே ஹல்வாவை வெறும் 10 நிமிஷத்தில் செய்து விடலாம் .வீட்டிற்கு விருந்தினர்கள் வந்து விட்டால் மிக குறைவான நேரத்தில் மற்றும் மிக எளிமையாக இந்த ஸ்வீட் செய்து அசத்தி விடலாம். இன்றைய பதிவில் சுவையான பாம்பே ஹல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்க உள்ளோம். 

பாம்பே ஹல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

சோள மாவு 1 கப் 
சர்க்கரை 2 1/2 கப் 
நெய் 1/2 கப் 
தண்ணீர் 4 கப் தண்ணீர் 
முந்திரி 3 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
ஏலக்காய் தூள் 1 சிட்டிகை 
புட் கலர்- 1 சிட்டிகை

குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய வெஜிடபிள் சீஸ் தோசை!!!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் தண்ணீர் சேர்த்து மாவு கட்டியில்லாமல் கரையும் வரை நன்றாக கலக்கி விட வேண்டும் .பின் அதனை ஒரு புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து , தீயினை மிதமாக வைத்து ,கடாயில் தண்ணீர் சேர்க்க வேண்டும். பின் அதனுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை தண்ணீரில் கரையும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். 

சர்க்கரை முற்றிலும் கரைந்த பின், அடுப்பின் தீயை சிம்மில் வைக்க வேண்டும். இப்போது கரைத்து வைத்துள்ள வைத்த சோள மாவு கரைசலை கடாயில் சேர்க்க வேண்டும். கை விடமால் தெடர்ந்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது கலவையானது கெட்டியாக மாற தொடங்கும் . பின் சோள மாவு கண்ணாடி போன்ற அமைப்பைப் எட்டும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

கண்ணாடி பதம் வந்த பிறகு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விட வேண்டும். நெய் நன்றாக இணைந்து வாசனை வர தொடங்கும் . இப்போது இதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிசேர்க்க வேண்டும்.

அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இனைந்து வரும் வரை கிளறி விட வேண்டும் . பின் விருப்பமான புட் கலர் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது ஹல்வா ஜெல்லி போன்று மாறத் தொடங்கும். இப்போது அடுப்பை அனைத்து விட வேண்டும். 

பின் ஒரு தட்டில் அல்லது ட்ரேயில் சிறிது நெய் தடவி அதில் முந்திரி சேர்க்க வேண்டும். தட்டில் இந்த ஹல்வாவை மாற்றி கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை அப்படியே வைத்து விட வேண்டும். 2 மணி நேரத்திற்கு பிறகு ஹல்வாவை துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தாங்க ருசியான பாம்பே ஹல்வா ரெடி!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios