Asianet News TamilAsianet News Tamil

உடல் எடையை குறைக்க உதவும் சத்தான "பார்லி கஞ்சி "!

இன்று நாம் சுவையான பார்லிக் கஞ்சியை செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

How to Prepare Barley Kanji in Tamil
Author
First Published Nov 5, 2022, 10:22 PM IST

நாம் அனைவரும் ஊட்டச்சத்து உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே போதும் , நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். ஊட்டச்சத்து உணவு வகைகள் பல இருந்தாலும், பார்லியானது நாம் ஆரோக்கியமாக வாழ பல வகைகளில் துணை புரிகிறது. 

அப்படியான பார்லியை வைத்து செய்கின்ற உணவு வகைகள் அனைத்துமே, நீரழிவு நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், டயட்டில் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், செரிமான கோளாறு உள்ளவர்கள்,சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைத்து விதமான நோய் உள்ளவர்களுக்கும் , மேலும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு என்றல் அது மிகையாகாது. 

மேலும் பார்லியானது உடலில் தங்கி இருக்கும் கொழுப்பினை கரைத்து, உடல் எடையை குறைக்க மிகவும் உதவி புரிகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பார்லியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

இன்று நாம் சுவையான பார்லிக் கஞ்சியை செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:

பார்லி - 1 கப்

உப்பு - தேவையான அளவு

சூப்பரான சுவையில் "கொங்குநாடு சிக்கன் சிந்தாமணி" இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, கடாய் சூடான பின், அடுப்பின் தீயை முற்றிலும் குறைத்து விட்டு, பார்லி அரிசியை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். வறுத்த பார்லியை ஆற வைத்து விட்டு, அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி, ரவை போன்ற பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு அடிகனமான மற்றும் விலாசமான பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரானது கொதிக்கும் போது, தீயனை மிதமாக வைத்து, பொடித்து வைத்துள்ள பார்லியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பார்லி ரவை முக்கால் பதம் வெந்த பிறகு, அதில் சிறிது உப்பு தூவி கொஞ்சம் கலந்து விட வேண்டும். கஞ்சி முழுவதுமாக வெந்த பிறகு, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு ,பாத்திரத்தை இறக்கி விட்டால் போதும்.மிக எளிமையான முறையில், சத்தான, சுவையான பார்லி கஞ்சி ரெடி!
 

Follow Us:
Download App:
  • android
  • ios