ஹெல்த்தி பிரேக் பாஸ்ட் - ஹெல்த்தி அண்ட் டேஸ்ட்டி ஸ்வீட் கோதுமை தோசை!

வாருங்கள்! ஹெல்த்தி அண்ட் டேஸ்ட்டி ஸ்வீட் கோதுமை தோசை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Wheat Jaggery Dosa Recipe in Tamil

நாம் காலை உணவை சத்தானதாக எடுத்துக் கொண்டால் அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கலாம். அப்படிபட்ட ஒரு ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் அனைத்து ரெசிப்பிக்களும் ஹெல்த்தியான உணவுகள் தான். அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவு வைத்து டேஸ்ட்டான ஸ்வீட் தோசையை செய்ய உள்ளோம். இதில் கோதுமை மாவுடன் வெல்லம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து செய்யப்படுவதால் நமது ஆரோக்யத்திற்கு ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம். இதனை வளரும் குழந்தைகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ரெசிபி தான் . மேலும் இந்த ரெசிபியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! ஹெல்த்தி அண்ட் டேஸ்ட்டி கோதுமை வெல்லம் தோசை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு - 2 கப்
  • பச்சரிசி மாவு - 1/4 கப்
  • வெல்லம் - 1 கப்
  • தேங்காய் - 1/4 மூடி
  • பழுத்த வாழைப்பழம் - 2
  • நெய் - தேவையான அளவு
  • ஏலக்காய் - 4

 

கமகமக்கும் ஹெல்த்தி "நூடுல்ஸ் வெஜ் சூப்" ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் துருவிய வெல்லத்தை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை மற்றொரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்து வைத்துள்ள வாழைப்பழம், வெல்ல பாகு, தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக போட்டு (தேவையெனில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்) கலவையை தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடான பின் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி சிறிது நெய் ஊற்றி வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு சிறிது நெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தி ஸ்வீட் கோதுமை தோசை ரெடி! 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios