காலை உணவிற்கு பெஸ்ட் சாய்ஸ் கோதுமை மாவு கீரை அடை !

வாருங்கள்! சத்தான கோதுமை மாவு கீரை அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

How to make Wheat Flour Spinach Adai in Tamil

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்று சாப்பிட்டு நம்மில் பலருக்கும் அலுத்து போய் இருக்கும். கொஞ்சம் மாற்றாக அதே நேரத்தில் சத்தான ஒரு காலை டிபன் ரெசிபியை பார்க்கலாமா?

பொதுவாக கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை, பூரி, சப்பாத்தி, புட்டு,அல்வா என்று பல விதமான ரெசிபிக்கள் செய்ய முடியும். அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவினை வைத்து சுவையான மற்றும் சத்தான ரெசிபியான கோதுமை கீரை அடை செய்வதை காணலாம். அந்த வகையில் இன்று கோதுமை மாவில் கீரை சேர்த்து ருசியான அடையை காண உள்ளோம்.

கோதுமை மாவில் செய்யப்படுவதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவு என்று கூறலாம். காலை உணவாக எடுத்துக் கொள்ள பெஸ்ட் சாய்ஸ் இந்த கோதுமை மாவு கீரை அடை. மேலும் இதனை மாலை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கும் ஸ்னாக்ஸாக செய்து தரலாம்.

வாருங்கள்! சத்தான கோதுமை மாவு கீரை அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • கீரை - 1 கப்
  • கோதுமை மாவு - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 4
  • வெங்காயம் - 2
  • மல்லித்தழை - கையளவு
  • சீரகத்தூள் - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

 

            கம கம வாசனையில் ஆளை இழுக்கும் முட்டை கொத்து இட்லியை இப்படி செய்து பாருங்க!

 

செய்முறை:

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று கீரை மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு விலாசமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மாவில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் மாவினில் சீரகத் தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்து கலந்து விட வேண்டும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல் சூடான பின்பு அதில் சிறிது எண்ணெய் தடவி விட வேண்டும். பின் அதில் கரைத்து வைத்துள்ள மாவினை சற்று தடிமனாக ஊற்றிக் கொண்டு சிறிது எண்ணெய் விட வேண்டும்.
ஒரு பக்கம் வெந்து சிவந்த பின்னர் மறுபக்கம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்து பின் பரிமாறினால் கோதுமை மாவு கீரை அடை ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios