கம கம வாசனையில் ஆளை இழுக்கும் முட்டை கொத்து இட்லியை இப்படி செய்து பாருங்க!

வாருங்கள்! ருசியான முட்டை கொத்து இட்லியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

 How to make Egg Kothu Idly Recipe in English.

வழக்கமாக இட்லி போன்றவை மீந்து போனால் நம்மில் பலரும் உப்மாவை தான் செய்து சுவைத்து இருப்போம். ஆனால் இன்று மீந்த இட்லியில் முட்டை சேர்த்து சூப்பரான சுவையில் முட்டை கொத்து இட்லியை செய்து சாப்பிடலாம். இதனை ஒரு முறை செய்து பாருங்க. செய்து முடித்த அடுத்த நிமிடமே அனைத்தும் காலியாகி விடும் அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும். 

வாருங்கள்! ருசியான முட்டை கொத்து இட்லியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • இட்லி - 6
  • முட்டை - 3
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 3
  • தனியா தூள் - 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகுப் பொடி - 1/2 ஸ்பூன்
  • சோம்பு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • கொத்தமல்லி - கையளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

      சளி,இருமலை விரட்டி அடிக்க தூதுவளை இலை தோசையை செய்து சாப்பிடுங்க!

செய்முறை :

முதலில் இட்லியை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மல்லிதழை ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகன்ற கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் சோம்பு சேர்த்து தாளித்துக் கொண்டு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இரண்டும் வதங்கிய பின் அடுத்தாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் தக்காளி சேர்த்து, நன்கு மசியுமாறு வதக்கி விட வேண்டும். தக்காளி மசிந்த பிறகு தனியா தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து அதன் காரத் தன்மை போகும் வரை வதக்கி விட்டு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


பின் உதிர்த்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கலவையை சுமார் 5 நிமிடங்கள் வரை பிரட்டி விட்டு அடுப்பினை ஆஃப் செய்து விட்டு இறுதியாக அரிந்த மல்லித்தழையை தூவி பரிமாறினால் முட்டை கொத்து இட்லி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios