இட்லி மாவு இல்லைனா என்னங்க , 1 தடவ இப்படி கோதுமை மாவு வைத்து இட்லி செய்து சாப்பிடுங்க!

வாருங்கள்! சூப்பர் சாஃப்ட் கோதுமை மாவு இட்லி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Wheat Flour Idly Recipe in Tamil

வழக்கமாக கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி சூப்பராக இருக்கும். கோதுமை மாவு சேர்த்து ரொட்டி வகைகள்,சப்பாத்தி, பூரி மற்றும் தோசை ஆகியவை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் கோதுமை வைத்து ஒரு சூப்பரான இட்லி ரெசிபியை செய்ய உள்ளோம்.

இந்த மாவில் தாளிப்பும் சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை வேற லெவெலில் இருக்கும். குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி இதனை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் கோதுமை மாவில் எப்போதும் சப்பாத்தி, ரொட்டியை செய்து சாப்பிட்டு அலுத்து போனவர்கள் இப்படி ஒரு முறை கோதுமை மாவு வைத்து சுவையான சாஃப்ட் டான இட்லி செய்து சாப்பிட்டால் ஒரு நல்ல சேஞ்ஜாக இருக்கும்.

வாருங்கள்! சூப்பர் சாஃப்ட் கோதுமை மாவு இட்லி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -1 கப்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
கேரட் – 1
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மல்லித் தழை - கையளவு
கறிவேப்பிலை -1 கொத்து
 

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேபி கார்ன் பஜ்ஜி !

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கோதுமை மாவை சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை தீயினை சிம்மில் வைத்து வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழை,பச்சை மிளகாய்,இஞ்சி ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த பின், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, இஞ்சி துருவல் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும் .

பின் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இந்த கலவையை சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் வறுத்து எடுத்து வைத்துள்ள கோதுமை மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கொஞ்சம் கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .

பின் அதில் சோடா உப்பு சேர்த்து, வதக்கி வைத்துள்ள கலவை, துருவி வைத்துள்ள கேரட் ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விட வேண்டும். இட்லி தட்டுகளின் மீது மாவு ஊற்றி வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான் சுவையான ,ஆரோக்கியமான கோதுமை மாவு இட்லி ரெடி!
இதற்கு கார சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios