Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேபி கார்ன் பஜ்ஜி !

வாருங்கள்! மொறுமொறு பேபி கார்ன் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Crispy Baby Corn Bajji in Tamil
Author
First Published Mar 17, 2023, 5:34 PM IST

என்ன தான் மதியம் வயிறு  முட்ட சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் சுட சுட ஏதோ ஒரு ஸ்னாக்ஸ் வகையை செய்து சாப்பிடும் பழக்கம்  நம் அனைவரிடமும் உண்டு. அந்த வகையில் புட்டு, சண்டல் ,கட்லட், போண்டா, பஜ்ஜி போன்றவை பிரதான ஸ்னாக்ஸ் வகைகள் ஆகும்.

இன்று நாம் மாலை நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் அதிலும் குறிப்பாக பள்ளி முடித்து வரும் குழந்தைகள் மிகவும் சாப்பிடும் ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். குழந்தைகளுக்கு பேபி கார்ன் என்றால் மிகவும் பிடிக்கும்.அந்த பேபி கார்ன் வைத்து அட்டகாசமான மொறுமொறுவென ஒரு பஜ்ஜி ரெசிபியை தான் காண உள்ளோம்.

இந்த பேபி கார்ன் பஜ்ஜி வழக்கமாக நாம் சாப்பிடும் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி போன்றவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுவையில் இருக்கும். இதனை செய்ய குறைந்த நேரமே ஆவதால் எப்போது வேண்டுமானலும் செய்து  சாப்பிடலாம்.வீட்டில் எதிர்பாராத நேரத்தில் கெஸ்ட் வந்தாலும் இதனை செய்து கொடுத்து அசத்திடலாம். 

வாருங்கள்! மொறுமொறு பேபி கார்ன் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 6
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு-1/2 கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா மாவு - 1 சிட்டிகை

வீட்டில் பிஸ்கட் இருந்தால் போதும்! சுட சுட அல்வா ரெடி!

செய்முறை:

முதலில் பேபி கார்னை ஒரே மாதிரியான அளவில் நீளவாக்கில் 3 துண்டுகளாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள்,பெருங்காயத்தூள்,உப்பு மற்றும் சோடா மாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைக்க வேண்டும்.
இப்போது வெட்டி வைத்துள்ள பேபி கார்னை பஜ்ஜி மாவில் டிப் செய்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இதற்கு தேங்காய் சட்னி அல்லது டொமேட்டோ சாஸ் போன்றவை சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.இப்போது கடைகளில் பேபி கார்ன் நிறைந்து காணப்படுகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சி சேட்டு பாருங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios