Asianet News TamilAsianet News Tamil

தீபாவளி அன்று சூப்பரான டூ இன் ஒன் மட்டன் குழம்பு செய்வோமா?

நாம் தஞ்சாவூர் ஸ்டைலில் இந்த டூ இன் ஒன் மட்டன் குழம்பை எப்படி செய்யலாம் என்று இந்த பகுதியில் காணலாம். 

How to make two in one Mutton Gravy in Tamil
Author
First Published Oct 19, 2022, 3:10 PM IST

தீபாவளி பர்சேஸ் எல்லாம் முடித்து இருப்பீர்கள். இப்போது தீபாவளி அன்று காலை என்ன ரெசிபி, மதியம் என்ன ரெசிபி செய்யலாம் என்று சற்று குழப்பமாக இருக்கா? இந்த தீபாவளி பண்டிகையன்று ஒரு ஸ்பெஷலான டூ இன் ஒன் மட்டன் குழம்பு செய்து காலை இட்லி,  மதியம் பிரியாணி மற்றும் வெள்ளை சாததிற்கும் வைத்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். 

நாம் தஞ்சாவூர் ஸ்டைலில் இந்த டூ இன் ஒன் மட்டன் குழம்பை எப்படி செய்யலாம் என்று இந்த பகுதியில் காணலாம். குறிப்பாக இதன் சுவையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடிக்கும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

மட்டன் - 1/2 கிலோ 
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
தேங்காய் - 4 ஸ்பூன் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 6
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 

தீபாவளி ஸ்பெஷல்- கெஸ்ட்க்கு புது ஸ்னாக்ஸ் செய்வோமா?

சோம்பு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1ஸ்பூன்
அன்னாசிப் பூ - 1
பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 4
கருவேப்பிலை -ஒரு கொத்து 
மல்லி தழை - சிறிது
எண்ணெய் -தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் மட்டனை நன்றாக தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கரில் அலசிய மட்டனை குக்கரில் சேர்த்து ,அதில் சிறிது மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், பொடியாக நறுக்கிய 1 தக்காளி மற்றும் உப்பு சேர்த்து,தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை சிம்மில் வைத்து 7 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது இன்னொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய், சோம்பு, மிளகு, , மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, அதனை மிக்சர் ஜாரில் போட்டு, அதனுடன் மல்லித் தூளை சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்

பின்பு துருவிய தேங்காய் மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு , சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை,,கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த உடன் மீதிமிருக்கும் ஒரு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இப்போது இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ,பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொண்டு, பின் அதில் தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும். 

இப்போது அரைத்து எடுத்து வைத்துள்ள மிளகாய் விழுதை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொண்டு,அதில் வேக வைத்துள்ள மட்டன் ஸ்டாக் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை கொதிக்க விட வேண்டும். 

இந்த தீபவளிக்கு டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்ஃபி ! செய்யலாம் வாங்க!

இந்நிலையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து விட்டு , அதனுடன் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 

குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, அடுப்பை ஆப் செய்து விட்டு குழம்பின் மேல் மல்லிதழையை தூவினால், சுவையான தஞ்சாவூர் மட்டன் குழம்பு தயார்.! இந்த தீபாவளிக்கு இந்த சுவையான மட்டன் குழம்பை காலையில் இட்லி மற்றும் மதியம் பிரியாணிக்கு தீபாவளியை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழுங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios