Asianet News TamilAsianet News Tamil

இந்த தீபவளிக்கு டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்ஃபி ! செய்யலாம் வாங்க!

ஆரோக்கியம் நிறைந்த வேர்க்கடலை வைத்து பீனட் பர்பி ஸ்வீட்டை எப்படி வீட்டில் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 
 

How to make Double Layered Peanut Barfi in Tamil
Author
First Published Oct 18, 2022, 8:01 PM IST

நம்மில் பெரும்பாலோனோர் தீபாவளிக்கான புத்தாடை ஷாப்பிங் முடித்து இருப்பீர்கள் . அடுத்து என்ன? ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் தான் பிளான் பண்ணிட்டு இருப்பீங்க. பக்கத்து வீட்டில் செய்யாத , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் செய்யாத ஒரு ஸ்வீட்டை நாம் இன்று செய்வோமா? ஆரோக்கியமான ஒரு ஸ்வீட்டை நம்மை நேசிப்பவர்களுக்கு தருவதே நமது அன்பின் வெளிப்பாடாக இருக்கும்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் பொதுவாக ஒரு சில இனிப்பு வகைகளை நாம் வீட்டில் செய்வோம், சில வற்றை வெளியில் உள்ள பலகார கடைகளில் இருந்து வாங்கி வந்து சுவைப்போம். இம்முறை எந்த ஒரு ஸ்வீட்டையும் வெளியில் வாங்காமல் நமது பதிவுகளின் மூலமாக அனைத்து விதமான ஸ்வீட்களையும் நம் வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொண்டு செய்யலாம்.

விலை மதிப்பில்லாத உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆரோக்கியமான இனிப்பை இந்த தீபாவளியில் செய்து கொடுத்து அவர்கள் அன்பூ மழையில் இடம் பெறுங்கள்.  அந்த வகையில் இன்று நாம் ஆரோக்கியம் நிறைந்த வேர்க்கடலை வைத்து பீனட் பர்பி ஸ்வீட்டை எப்படி வீட்டில் செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

தீபாவளி ஸ்பெஷல்! : என்ன ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை- 2கப் 
சர்க்கரை- 1 கப் சர்க்கரை 
கோகோ பவுடர்- 2ஸ்பூன் 
மில்க் பவுடர் - 1/4 கப் 

செய்முறை: 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்க்காமல், வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொண்டு, அதனை ஆற வைத்து தோல் நீக்கி பல்ஸ் மோடில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அரைத்தால் அதிலிருக்கும் எண்ணெய் வெளியேறிடும். அரைத்த வேர்க்கடலையை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ளவும். அதனுடன் பால் பவுடரையும் சேர்த்து மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும் இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து , கடாயில் சர்க்கரையைப் சேர்த்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு காய்ச்ச வேண்டும். கம்பி பதம் வந்த வுடன் அதில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பவுடரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

தீபாவளி ஸ்பெஷல்- கெஸ்ட்க்கு புது ஸ்னாக்ஸ் செய்வோமா?

நன்றாக சுண்டி வந்ததும் அதில் பாதி அளவு எடுத்து ஒரு தட்டில் அல்லது ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்து கொண்டு , மீதியில் கோகோ பவுடரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். கோகோ பவுடரை சேர்த்த பின் நன்றாக சுண்டி வரும் போது இதனையும் தனியாக வைத்து ஆற விட வேண்டும். இரண்டும் ஆறிய பின்பு ஒன்றன் பின் ஒன்றாக வைத்து , விருப்பமிருந்தால் மேலே சில்வர் லீப் ஒட்டி அழகுபடுத்திக் கொள்ளலாம் 

இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்பி ரெடி !!!

Follow Us:
Download App:
  • android
  • ios