Asianet News TamilAsianet News Tamil

Wheat Gulab jamun : தீபாவளி ஸ்பெஷல்- கெஸ்ட்க்கு புது ஸ்னாக்ஸ் செய்வோமா?

பொதுவா நாம் மைதாமாவு ,பால் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி தான் க்ளோப் ஜாமுன் செய்வது வழக்கம். இந்த முறை சற்று மாறுதலாக கோதுமை மாவினை வைத்து க்ளோப் ஜாமுன் செய்வோமா?
 

How to make Wheat Globe Jamoon In Tamil
Author
First Published Oct 17, 2022, 11:55 AM IST

வீட்டில் அநேக விஷேச தினங்களில் நாம் செய்கின்ற ஒரு இனிப்பு வகை என்றால் - கேசரி மற்றும் க்ளோப் ஜாமூன் தான். குழந்தைகள் முதல் பெரியர்வரகள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு எனில் அதில் கண்டிப்பாக க்ளோப் ஜாமுன் நிச்சசயம் இடம் பெரும். 

பொதுவா நாம் மைதாமாவு ,பால் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி தான் க்ளோப் ஜாமுன் செய்வது வழக்கம். இந்த முறை சற்று மாறுதலாக கோதுமை மாவினை வைத்து க்ளோப் ஜாமுன் செய்வோமா?

குறைந்த நேரத்தில் எளிமையாகவும், சுவையாகவும் வீட்டிலேயே கோதுமை மாவினை சேர்த்து சாஃப்டான க்ளோப் ஜாமுன் செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

க்ளோப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
பால் பவுடர் – 4 ஸ்பூன்
பால் – 1/4 கப
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 3
ஆரஞ்ச் கலர் – 1 சிட்டிகை 
பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
நெய் – தேவையான அளவு 
எண்ணெய் – 1/4 லிட்டர்.

செய்முறை:

ஒரு pan இல் சிறிது நெய் சேர்த்து சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுகதுக் கொள்ளவும்.பிறகு மீண்டும் சிறிது நெய் சேர்த்து கோதுமை மாவின் பச்சை வாடை செல்லும் வரை வறுத்து கொள்ளவும். நன்கு வறுத்த பின், ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்.மாவு நன்றாக ஆறிய பின் பால்,பால் பவுடர்,பேக்கிங் சோடா மற்றும் நெய் சேர்த்து சாஃப்டாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் .10 நிமிடங்கள் ஆனவுடன் மாவினை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும் .எண்ணெய் நன்றாக காய்ந்த உடன் தீயை சிம்மில் வைத்து, பிடித்து வைத்துள்ள மாவு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ளவும்.

தீபாவளி ஸ்பெஷல்! : என்ன ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?

பொன்னிறமாக மாறிய பின்,எண்ணெய்யை வடித்து விட்டு வேறு ஒரு பெரிய தட்டில் தனியே வைக்கவும் .இப்பொழுது ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொண்டு, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.  சர்க்கரைப்பாகு கொஞ்சம் திக்கானதும், அடுப்பை அணைத்து விட்டு மூன்று ஏலக்காயைத் தட்டி அதில் சேர்த்து விடவும். பின்பு 1சிட்டிகை ஆரஞ்சு கலர் , சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும். இதணை பாகினில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

இப்போது வறுத்து வைத்துள்ள ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து, நன்கு மிக்ஸ் செய்து5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின்னர் சுவைத்தால் இனிப்பான கோதுமை மாவு குலோப் ஜாமுன் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios