Asianet News TamilAsianet News Tamil

சளி,இருமலை விரட்டி அடிக்க தூதுவளை இலை தோசையை செய்து சாப்பிடுங்க!

வாருங்கள்! சளி, இருமலை விரட்டி அடிக்கும் தூதுவளை இலை தோசையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

How to make Thoothuvalai Spinach Dosa in Tamil
Author
First Published Jan 10, 2023, 3:16 PM IST

வழக்கமாக நாம் செய்து சாப்பிடும் உணவுகளையை கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். நமது வீட்டில் உள்ளவர்களின் அன்பினை பெற்று விடலாம். அந்த வகையில் இன்று நாம் தினமும் நாம் சாப்பிடுகின்ற தோசையில் தூது வளை கீரை சேர்த்து தூது வளை தோசை செய்யலாம் .

பொதுவாக தூதுவளை இலை வைத்து ரசம், சூப் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சத்தான மற்றும் ஆரோக்கியமான தூது வளை இலை தோசையை காண உள்ளோம்.


வாருங்கள்! சளி, இருமலை விரட்டி அடிக்கும் தூதுவளை இலை தோசையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

  • தூதுவளை கீரை -1/2 கப்
  • இட்லி அரிசி - 1 கப்
  • உளுந்து -1/4 கப்
  • வெந்தயம் -1/4 ஸ்பூன்
  • இஞ்சி - 1 துண்டு
  • வர மிளகாய் - 2
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

            சாமை வெண்பொங்கல் செய்து குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து அதனை அலசி விட்டு தண்ணீர் ஊற்றி கிட்ட தட்ட 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பினையும் கழுவி விட்டு அதனையும் தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

தூதுவளை இலை கீரையை அலசி வைத்துக் கொள்ள வேண்டும் . அதே போன்று இஞ்சியை அலசி விட்டு தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி,வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பு மூன்றினையும் தண்ணீர் இல்லாமல் வடி கட்டி அதனை ஒரு கிரைண்டரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கிரைண்டரில் சிறிது இஞ்சி, தூதுவளை கீரை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்துக்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவினில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு சுமார் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு பிறகு மாவினை நன்றாக கலந்து விட வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சூடாக்க வேண்டும். பின் தோசைக்கல்லில் மாவினை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு, தோசையை மறுபக்கம் திருப்பி போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால் சத்தான தூதுவளை இலை தோசை ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios