Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் ஸ்பெஷல் ! சாமை வெண்பொங்கல் செய்து குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!

வாருங்கள்! ருசியான சாமை வெண்பொங்கலை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

Pongal Special - How  to make Little Millet Pongal Recipe
Author
First Published Jan 7, 2023, 4:21 PM IST

தமிழர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, தித்திப்பான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்,கரும்பு,வண்ண வண்ண கோலங்கள் ஆகியவை தான்.

வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம். இந்த முறை வெண்பொங்கலை பச்சரிசியில் செய்யாமல் கொஞ்சம் மாற்றாக சிறுதானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் செய்து பொங்கலை கொண்டாடுவோம். சிறுதானிய வகையில் செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

வாருங்கள்! ருசியான சாமை வெண்பொங்கலை வீட்டில் எளிதாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சாமை மிளகு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :

  • சாமை அரிசி - 1/2 கிலோ
  • பாசிப் பருப்பு - 100 கிராம்
  • இஞ்சி - 1 துண்டு
  • சீரகம் - 2 ஸ்பூன்
  • மிளகு -1 1/2 ஸ்பூன்
  • பெருங்காய தூள் - 2 சிட்டிகை
  • நெய்-தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • முந்திரி பருப்பு-10

     பொங்கல் ஸ்பெஷல் - கற்கண்டு பொங்கல் செய்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!


செய்முறை:

முதலில் இஞ்சியை அலசி விட்டு அதன் தோல் நீக்கி மிக பொடியாக அல்லது துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் சாமை அரிசி மற்றும் பாசிப்பருப் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசி மற்றும் பருப்பினை ஒரு 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் .

அடுப்பில் ஒரு குக்கர் அல்லது ஒரு பாத்திரம் வைத்து நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் உருகிய பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு வேண்டும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் சேர்த்து, நெய் உருகிய பின்னர் அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி பருப்பை வேக வைத்து எடுத்துள்ள சாமை பொங்கலில் சேர்த்துக் கிளறினால் அசத்தலான சுவையில் சத்தான சாமை அரிசி வெண்பொங்கல் ரெடி!


இந்த பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரியமான சத்தான சிறு தானியமான சாமையை பயன்படுத்தி வெண்பொங்கல் செய்து அனைவரும் குடும்பத்துடன் சுவைத்து மகிழ்ந்து கொண்டாடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios