Asianet News TamilAsianet News Tamil

குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!

வாருங்கள்! சில்லென்ற குலக்கி சர்பத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Sweet Basil Sharbat in Tamil
Author
First Published Jan 23, 2023, 12:31 PM IST

தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் குளிர்ச்சியான நீர் ஆகாரங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்வது சிறந்த மற்றும் அவசியமான ஒன்றாகும். நீர் ஆகாரங்கள் எனில் இளநீர், சர்பத் மற்றும் பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

சர்பத் என்றால் நம்மில் பலருக்கும் நினைவில் வருவது எலுமிச்சை சர்பத், நன்னாரி சர்பத் என பல விதமான சர்பத் வகைகள் தான். அந்த  வரிசையில் இன்று நாம் குலுக்கி சர்பத் ரெசிபியை காண உள்ளோம். இதனை செய்வது மிகவும் எளிது. இனி வீட்டிற்கு வரும் கெஸ்ட்களுக்கு இந்த சர்பத் செய்து கொடுத்து அசத்தலாம்.


வாருங்கள்! சில்லென்ற குலுக்கி சர்பத்தை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • சோடா – 1 கப்
  • சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன்
  • எலுமிச்சை பழம் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • சர்க்கரை – 2 ஸ்பூன்
  • புதினா இலைகள் – 15
  • உப்பு – 2 சிட்டிகை
  • ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.

ஆரோக்கிய வாழ்விற்கு வாழைப்பூ துவையல் !

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு அதில் 1/ 2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக பச்சை மிளகாயை கீறிக் கொள்ள வேண்டும் அல்லது நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சம் பழங்களை சிறு சிறு வட்ட வடிவங்களில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.(1 எலுமிச்சம் பழத்தை 6 -8 துண்டுகளாக வெட்ட வேண்டும் )இப்போது ஒரு விலாசமான பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் ஊற வைத்ததுள்ள சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை பழத் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் அலசிய புதினா இலைகள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது இதில் 1/2 எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக சோடா மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அல்லது மூடி போட்டு மூடி சேர்த்துள்ள சர்க்கரை கரையும் வரை நன்றாக குலுக்க வேண்டும். பின் அதனை ஒரு கிளாஸ் அல்லது கப்களில் ஊற்றி பரிமாறினால் சில்லென்ற குலுக்கி சர்பத் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios