சூடான இட்லியும் சுவையான எள்ளு பொடியும் வைத்து சாப்பிடலாம் வாங்க!
வாருங்கள்! ருசியான எள்ளு இட்லி பொடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் இட்லி, தோசை போன்றவற்றிக்கு சட்னி, சாம்பார் போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். என்ன தான் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டாலும் இட்லி பொடியை வைத்து சாப்பிட்டால் அதன் சுவை அலாதி தான். கொஞ்சம் பொடி வைத்து சாப்பிட்டால் மேலும் சில பல இட்லிகளை அதிகமாக சாப்பிடலாம். இந்த பொடியை ஒரு முறை செய்து வைத்தால் நீண்ட நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
பொடியில் கறிவேப்பிலை பொடி,பருப்பு பொடி, எள்ளு பொடி என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற எள்ளு பொடியை செய்ய உள்ளோம். எங்கேனும் வெளியூர்களுக்கு ட்ராவல் செய்யும் போது இட்லியும் இந்த பொடியும் போதும். வேறு எதையும் எடுத்து செல்ல வேண்டாம்.
வாருங்கள்! ருசியான எள்ளு இட்லி பொடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- வெள்ளை எள் – 1 கப்
- உளுந்தம் பருப்பு – 1/2கப்
- கடலை பருப்பு – 1/4 கப்
- காய்ந்த மிளகாய் – 10
- பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- உப்பு – தேவையான அளவு.
என்ன! சிக்கன் வைத்து ஊறுகாயா? பார்க்கலாம் வாங்க !
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் குறைந்த தீயில் வைக்க வேண்டும். கடாய் சூடான பின் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக அவைகளின் நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் காய்ந்த வர மிளகாயை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொண்டு பின் அதில் காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து அது சுருட்டத் தொடங்கும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் வெள்ளை எள்ளை சேர்த்து , அது வெடித்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொண்டு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதனையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கலவை ஆறிய பிறகு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தான்! சுவையான மணமணக்கும் எள்ளு இட்லி பொடி ரெடி! சூடான இட்லிக்கு இந்த எள்ளு பொடி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்றே தெரியாது! .