Asianet News TamilAsianet News Tamil

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ரூமாலி ரொட்டி செய்யலாம் வாங்க!

வாருங்கள்! சுவையான ரூமாலி ரொட்டி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொல்லலாம்.

How to make Roomali Roti Recipe in Tamil
Author
First Published Jan 30, 2023, 8:29 AM IST

வழக்கமாக நைட் டின்னருக்கு சப்பாத்தி போன்ற ரொட்டிகளை தான் நாம் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வோம். ரொட்டி வகைகளில் சப்பாத்தி, புல்கா, நாண், தந்தூரி ரொட்டி, ஜூவாரி ரொட்டி என்று பல விதங்களில் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சுவையான ரூமாலி ரொட்டியினை செய்ய உள்ளோம்.

இதனை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளவும் சப்பாத்திக்கு இது ஒரு நல்ல சேன்ஜாக இருக்கும். இதனை மிக குறைந்த நேரத்தில் நேரத்தில் செய்து விடலாம். இதற்கு சைவம் அல்லது அசைவ கிரேவிகளையும் வைத்து சாப்பிடலாம்.
 

வாருங்கள்! சுவையான ரூமாலி ரொட்டி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொல்லலாம்.


தேவையான பொருட்கள்:

  • மைதா -2 கப்
  • பால் -1 /4 கப்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு

 

    ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஆட்டு ஈரல் வறுவல் செய்யலாம் வாங்க!

செய்முறை :


முதலில் அகலமான பாத்திரத்தில் மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றிக் கொன்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.பின் மாவில் சிறிது பட்டர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் பிசைந்த மாவில் சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி விட்டு ஒரு ஈரத்துணியை போட்டு மூடி சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.1/2 மணி நேரத்திற்கு பிறகு மாவினை கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு உருண்டைகளாக உறுதிக் கொள்ள வேண்டும்.


அடுத்தாக ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து சிறிது எண்ணெய் தடவி மைதா மாவு தூவி கொஞ்சம் பெரிய மெல்லியதாக தேய்த்து விட வேண்டும். அடுத்து அதனை வட்ட வடிவத்தில் தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும்.இப்போது வட்ட வடிவத்தில் தேய்த்து வைத்துள்ளதை எடுத்துஅதில் சிறிது மைதா தூவி மற்றொரு வட்ட வடிவ மாவை வைத்து நீள் வட்டமாக சாஃப்ட்டாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் டவாவை கவிழ்த்து வைக்க வேண்டும். டவா சூடான பின் அதில் தேய்த்து வைத்துள்ள ரொட்டியை போட்டு ஒரு பக்கம் பொன்னிறமாக சுட்ட பிறகு ரொட்டியை மறுபக்கம் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான்! சுவையான ரூமாலி ரொட்டி ரெடி! இதற்கு பன்னீர் கிரேவி, சிக்கன் கிரேவி, கார்ன் கிரேவி என்று எது வைத்து சாப்பிட்டலும் அருமையாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios