ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஆட்டு ஈரல் வறுவல் செய்யலாம் வாங்க!


வாருங்கள்! சத்தான ஆட்டு ஈரல் வறுவல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Mutton Liver Roast in Tamil

அசைவ உணவான மட்டனில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதத்தில் சமைத்து சாப்பிடலாம். ஒவ்வொரு உறுப்பும் மனித உடலுக்கு பல ஆரோக்கிய நலன்களை அள்ளித் தருகிறது. அந்த வகையில் இன்று நாம் ஆட்டு ஈரல் வைத்து ஒரு சத்தான ரெசிபியை காண உள்ளோம்.

ஆட்டு ஈரல் வைத்து குழம்பு, கிரேவி, ரோஸ்ட் என்று பல விதங்களில் சமைக்கலாம் .இன்று நாம் ஆட்டு ஈரல் வைத்து எளிமையான ஆட்டு ஈரல் வறுவல் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

ஆட்டு ஈரலில் காப்பர் விட்டமின் பி12, ஏ என்று பல விதமான சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் பல நன்மைகளை தருகிறது. மேலும் இதனை இரும்பு சத்து குறைப்பாடு உள்ளவர்கள், ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் விரைவில் அப்பிரச்னைகளுக்கு நல்ல தீர்வை காணலாம்.

வாருங்கள்! சத்தான ஆட்டு ஈரல் வறுவல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • மட்டன் ஈரல் -1 /2 கிலோ
  • பூண்டு - 2 பற்கள்
  • சின்ன வெங்காயம் -10
  • சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
  • மிளகுத்தூள்-1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

இனிமே காளான் வாங்கினா இப்படி தொக்கு செய்து சாப்பிடுங்க !


செய்முறை :

முதலில் ஈரலை சுத்தம் செய்து 2 முறை தண்ணீரில் அலசி எடுத்துக் வைத்துக் கொள்ள வேண்டும். அலசிய ஈரலை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து அதில் சீரகத்தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.

மசாலாக்களின் காரதன்மை சென்ற பிறகு அதில் வெட்டி வைத்துள்ள ஈரலை சேர்த்து வதக்கி விட வேண்டும். ஈரல் வதங்கி வெந்து அதன் நிறம் மாறிய பிறகு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.இரண்டும் நன்றாக வதங்கிய பின்னர் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

15 நிமிடங்களுக்கு பிறகு ஈரல் நன்றாக வெந்து அதில் இருக்கும் அனைத்து தண்ணீரும் வற்றிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி வேண்டும்.அடுத்தாக அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் ,ஈரலும் எண்ணெய்யும் பிரிந்து வரும் போது ஆட்டு ஈரல் வறுவல் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios