இனிமே காளான் வாங்கினா இப்படி தொக்கு செய்து சாப்பிடுங்க !

வாருங்கள் சுவையான காளான் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Mushroom Thokku Recipe  in Tamil

சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65,மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து தொக்கு ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

வாருங்கள் சுவையான காளான் தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • காளான் - 1/4 கிலோ
  • வெங்காயம் - 2
  • தக்காளி -1
  • தனியா -2 ஸ்பூன்
  • மிளகு -1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் -1
  • பூண்டு- 1 பல்
  • லவங்கம் -2
  • பட்டை -1 இன்ச்
  • சோம்பு- 1
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு


வறுத்து அரைப்பதற்கு:

  • மிளகு -2 ஸ்பூன்
  • சீரகம்-2 ஸ்பூன்
  • தனியா -2 ஸ்பூன்
  • சோம்பு-2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்-1
  • பூண்டு- 2 பற்கள்

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் – “முடக்கத்தான் கீரை சட்னி” செய்யலாமா?


செய்முறை:
முதலில் மஷ்ரூமை நீட்டநீட்டமாக ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் சேர்க்காமல் மிளகு,சீரகம்,சோம்பு, தனியா,காய்ந்த வர மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த கலவையை ஆற வைத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, லவங்கம்,பட்டை போட்டு தாளித்துக் கொண்டு பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி சிறிது உப்பு சேர்த்து நன்றாக .கிளறி விட வேண்டும் .

இப்போது காளானை சேர்த்து நன்றாக கிளறி விட்டு தண்ணீர் ஊற்றாமல் வேக விட வேண்டும். காளான் வெந்த பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து 3 சுமார் நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். மசாலா அனைத்தும் காளானில் சேர்ந்து வாசனை வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி மல்லித்தழை தூவினால் சுவையான காளான் தொக்கு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios