Panner Tikka | ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா ! செய்வது எப்படி?

நாம் செய்யும் பல வகையான உணவு வகைகளில் பன்னீரையும் சேர்த்துக் செய்தால் அதன் சுவை அலாதியாக இருக்கும். இன்று ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் டிக்காவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
 

How to make Restaurant style Panner Tikka in Tamil

சைவ பிரியர்களின் பேவரைட் பன்னீர்! பன்னீரானது சைவ மக்களின் புரத தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக பன்னீர் உள்ளது.

நாம் செய்யும் பல வகையான உணவு வகைகளில் பன்னீரையும் சேர்த்துக் செய்தால் அதன் சுவை அலாதியாக இருக்கும். இன்று ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் டிக்காவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

பன்னீரின் மகத்துவம்:

பன்னீரில் பல தாதுக்கள், கொழுப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இதில் உள்ள அமினோ அமிலங்கள் அனைவருக்கும் நன்மையை தருகின்றன. 

பன்னீரானது எலும்பை வலுப்படுத்தவும், ​செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், ​வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மற்றும் பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. 

How to make Restaurant style Panner Tikka in Tamil

தேவையான பொருட்கள்:

வெங்காயம் -2 
சிவப்பு குடைமிளகாய் - 10 பீஸ் 
பச்சை குடை மிளகாய்- 10பீஸ் 
கடலை மாவு - 2 ஸ்பூன் 
வெண்ணெய் - 2 ஸ்பூன்
ஓமம் - 1/4 ஸ்பூன் 
கெட்டித்தயிர் - 1/2 கப் 

மேரினேட் செய்ய: 

இஞ்சி பூண்டு விழுது
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன் 
கரம் மசாலாத்தூள் -1 ஸ்பூன்
தனியாத்தூள் -1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 

அடிக்கடி சளிப் பிடிக்குதா? மழைக்காலத்திற்கு ஏற்ற இந்த குழம்பு தான் உங்களுக்கு பெஸ்ட்!

சீரகத்தூள் -1 ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன் 
கடுகு எண்ணெய் - 1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி -சிறிதளவு 
மிளகாய்த்தூள் -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

டிக்கா செய்ய :

பன்னீர் - 250 கிராம் 
வுட்டன் ஸ்க்யூவர் - 5
நெய் - 2 ஸ்பூன் 
எண்ணெய் - 5 ஸ்பூன் 

How to make Restaurant style Panner Tikka in Tamil

செய்முறை:

முதலில் வுட்டன் ஸ்க்யூவரை சுமார் 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் வெங்காயம், குடைமிளகாய் , பன்னீரை ஆகியவற்றை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய், ஓமம், கடலை மாவு ஆகியவை சேர்த்து கிளறிக்கொண்டு பின் தயிர் சேர்த்து மேரினேட் செய்ய தேவையான பொருள்களை சேர்த்து கொள்ளவும்..

Banana Fry : இது வஞ்சரமா? வாழைக்காயா? பார்க்கலாம் வாங்க!

இறுதியில் கடுகு எண்ணெயை காய்த்து அதனுள் ஊற்றி அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நன்றாக மிக்ஸ் ஆகும் படி நன்கு கிளறி விட வேண்டும். இப்போது இதனுள் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகள், குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஸ்க்யூவரில் பன்னீர், குடைமிளகாய், பன்னீர்,வெங்காயம், என ஒன்றை அடுத்து ஒன்றாக சொருகி டிக்காக்களை தயார் செய்து கொண்டு தோசைக்கல் காய்ந்த உடன் அதில் டிக்காவை வைத்து வேக விட வேண்டும்.

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கரி துண்டு மற்றும் நெய்யை ஊற்றி கொண்டு நடுவில் வைத்து கொள்ளவும். பிறகு டிக்காவை ஒரு மூடி போட்டு மூடவும். டிக்கா நன்றாக வேகும் படி பிரட்டி பிரட்டி போட வேண்டும். 

15 நிமிடங்கள் கழித்து சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios