Banana Fry : இது வஞ்சரமா? வாழைக்காயா? பார்க்கலாம் வாங்க!
வாழைக்காயை பஜ்ஜி செய்ய சீவுவது போல் மெல்லிய நீளவாக்கில் வெட்டி வறுவல் கூட செய்யலாம் தெரியுமா? இது பார்க்க மீனை மாதிரியே இருக்கும். இதனை பார்த்து, இது வஞ்சரம் மீனா? வாழைக்காய் வறுவலா? என்று யோசிக்கும் அளவிற்கு அருமையாக இருக்கும்.வாங்க! இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
தினமும் நாம் உணவுகளில் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.காய்கறிகள் பொதுவாக நம் உடலுக்கு தேவையான சத்துக்களை தருகின்றன.அப்படி பட்ட காய்களில் பலருக்கும் பிடித்த ஒரு காய் என்றால் அதில் வாழைக்காய் நிச்சயம் இடம் பெரும். வாழைக்காயை வைத்து வறுவல் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 3,
1/2 ஸ்பூன்- இஞ்சி பூண்டுபேஸ்ட்
1 ஸ்பூன்- கான்பிளவர் மாவு
1/2 ஸ்பூன் - மஞ்சள்தூள்
1/2 ஸ்பூன் - சோம்புத்தூள்
1 1/2 ஸ்பூன் - மிளகாய்த்தூள்
தேவையான அளவு - உப்பு
தேவையான அளவு - எண்ணெய்
செய்முறை:
பஜ்ஜி சுடுவதற்கு வாழைக்காயை நீளமாக சீவுவது போன்று இந்த வருவலுக்கும் மெல்லிய நீளமான பட்டையாக வெட்டிக் கொள்ளவும். வாழைக்காய் நிறம் மாறாமல் இருக்க தண்ணீரில் போட்டு விடுங்கள்.
Carrot Chutney : இதய நோய் வராமல் பாதுக்காக்க ஆரோக்கியமான கேரட் சட்னி!
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்துள்ள வாழைக்காய்களை சேர்த்து அடுப்பை ஆப் செய்து விடுங்கள். நீரின் சூட்டிலேயே வாழைக்காய் வெந்து விடும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அதனை மூடி வைத்து விடவும்.
அதன் பின் வாழை காய்களை ஒவ்வொன்றாக தனி தனியாக எடுத்து ஒரு பெரிய தட்டில் உலரவைத்து விடுங்கள்.அடுத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சோம்பு தூள் போன்றவற்றை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.
பின்பு ஒரு கிண்ணத்தில் கான்பிளவர் மாவு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை வாழைக்காய்களின் மீது நன்றாக தடவி விட வேண்டும்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தனித்தனியாக வாழைக்காய்களை எடுத்து மீனை எப்படி பொரிப்போமோ அது போல் பொரித்து கொள்ள வேண்டும்.
இப்போது மொறுமொறுவான பார்ப்பதற்கு மீனை போல் இருக்கும் இந்த வாழைக்காய் வறுவலை பிடிக்காது என யாரும் சொல்ல மாட்டார்கள்.நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்- இந்த வாழைக்காய் வறுவலை!