அடிக்கடி சளிப் பிடிக்குதா? மழைக்காலத்திற்கு ஏற்ற இந்த குழம்பு தான் உங்களுக்கு பெஸ்ட்!
மழைக்காலம் தொடங்கி விட்டாலே போதும், உடனே சளி, காய்ச்சல் என உடல் உபாதைகள் பலவும் வந்து விடும். இந்த காலநிலையை ரசிக்கவிடாமல் வரும் பிரச்னைகளை போக்க ஒரு சிறந்த 'ஸ்பைஸ்' தான் மிளகு. இரைப்பை குடல் வலி, குடல் வாயு மற்றும் பிற வயிறு தொடர்பான செரிமான பிரச்சனைகளை சீர் செய்கிறது மிளகு. இதுதவிர, மிளகிற்கு அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்சிடென்ட், கிருமி எதிர்ப்பு திறன் ஆகியவை அதிகமாக உள்ளது. இதனால் சளி, காய்ச்சலை விரட்டும் தன்மை மிளகுக்கு உண்டு. மிளகை முழுதாகவும் அல்லது பொடி செய்து தூளாகவும் பயன்படுத்தலாம். மிளகினை பயன்படுத்தி செய்யக்கூடிய பாரமரியம் மற்றும் சுவையான செட்டிநாடு குழம்பினை எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலம் தொடங்கி விட்டாலே போதும், உடனே சளி, காய்ச்சல் என உடல் உபாதைகள் பலவும் வந்து விடும். இந்த காலநிலையை ரசிக்கவிடாமல் வரும் பிரச்னைகளை போக்க ஒரு சிறந்த 'ஸ்பைஸ்' தான் மிளகு. இரைப்பை குடல் வலி, குடல் வாயு மற்றும் பிற வயிறு தொடர்பான செரிமான பிரச்சனைகளை சீர் செய்கிறது மிளகு.
இதுதவிர, மிளகிற்கு அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்சிடென்ட், கிருமி எதிர்ப்பு திறன் ஆகியவை அதிகமாக உள்ளது. இதனால் சளி, காய்ச்சலை விரட்டும் தன்மை மிளகுக்கு உண்டு. மிளகை முழுதாகவும் அல்லது பொடி செய்து தூளாகவும் பயன்படுத்தலாம். மிளகினை பயன்படுத்தி செய்யக்கூடிய பாரமரியம் மற்றும் சுவையான செட்டிநாடு குழம்பினை எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
மல்லி விதை - 3 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெண்களே உங்கள் கண்களுக்கு மேக்கப் போடும் போது இதை கொஞ்சம் கவனிங்க!
தாளிக்க :
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம், உளுந்து - தலா அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் தண்ணீரில் புளியை நன்றாக ஊறவைக்க வேண்டும். குழம்பிற்கு தேவையான மசாலா பொருட்களை தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு, அதிலேயே கறிவேப்பிலையைப் போட்டு வறுக்க வேண்டும். சட்டியின் சூட்டிலேயே அதுவும் நன்கு வறுபட்டு விடும். பிறகு இவை அனைத்தும் ஆறியதும், தேவையான அளவில் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Brinjal Kora : ஆந்திரா ஸ்பெஷல் வங்காய கோரா!
அடியில் கனமாக உள்ள சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடுபடுத்த வேண்டும். பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் போன்ற தாளிக்கக் வேண்டிய பொருட்களை போட்டுத் தாளிக்கவும். இதில், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். புளியை கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.
அவ்வளவு தான் மணக்கும் மிளகு குழம்பு தயாராகி விடும். வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் உடனே மிளகு குழம்பை செய்து அனைவரையும் அசத்தி விடலாம். பூண்டு சேர்த்து குழம்பு செய்தால், சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். மருத்துவப் பலன்கள் நிறைந்த மிளகு குழம்பை நெய் விட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். உணவைச் செரிக்க வைத்து, சளியினால் வரும் அலர்ஜியை மிளகு குழம்பு போக்கும்.