குட்டீஸ் விரும்பும் ''வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ்''! - ஹெல்தி & டேஸ்டி!

வாருங்கள்! க்ரிஸ்பி வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Raw Banana French Fries in Tamil

உருளைக்கிழங்கில் செய்த பிரெஞ்சு ஃப்ரைஸை நாம் அனைவரும் விரும்பி சாப்பிட்டு இருப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ் என்றும் கூறலாம். அந்த வகையில் இன்று நாம் வாழைக்காய் வைத்து க்ரிஸ்பியான ஃப்ரஞ்ச் ஃப்ரை ரெசிபியை பார்க்க உள்ளோம். 

வாழைக்காயினை சாப்பிட மறுப்பவர்களும் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். பின் இதனை மீண்டும் மீண்டும் செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லுவார்கள்.
வாருங்கள்! க்ரிஸ்பி வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்: 

  1. வாழைக்காய் – 1
  2. சோள மாவு – 4 ஸ்பூன்
  3. அரிசி மாவு – 2ஸ்பூன்
  4. மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
  6. மைதா மாவு – 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  8. மிளகுத்தூள் – 2 சிட்டிகை
  9. எண்ணெய் -தேவையான அளவு 
  10. உப்பு – தேவையான அளவு 

How to make Raw Banana French Fries in Tamil

செய்முறை

முதலில் ஒரு வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு பிரெஞ்சு ஃப்ரைஸ்க்கு ஏற்ற மாதிரி ஒரே மாதிரியான அளவில் நீட்டநீட்டமாக மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

சட்டென்று எளிதில் செய்யக்கூடிய ஆனியன் சிக்கன் ப்ரை செய்வோமா!

அடுத்தாக பிரட் கிரம்ஸினை பொடித்துக் கொண்டு அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கார்ன் பிளார் மற்றும் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

மற்றொரு பௌலில் கார்ன் பிளார், மைதா, மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது வாழைக்காய் துண்டுகளை பிரெட் க்ரம்ஸ் கலவையில் டிப் செய்து விட்டு பின் தோசை மாவு போல இருக்கும் கலவையில் டிப் செய்து கொள்ள வேண்டும்.

பின் மீண்டும்  ட்ரை பிரட் கிரம்ஸ்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்று அனைத்து வாழைக்காய் துண்டுகளையும் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு மாவில் டிப் செய்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அவ்ளோதான்! க்ரிஸ்பியான வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ் ரெடி! இதனை டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios