சட்டென்று எளிதில் செய்யக்கூடிய "ஆனியன் சிக்கன் ப்ரை" செய்வோமா!

வாருங்கள்! ஈஸியான மற்றும் டேஸ்ட்டான ஆனியன் சிக்கன் ப்ரை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

How to make Onion Chicken Fry in Tamil

அசைவ உணவு வகைகளில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் ஒரு வகை என்றால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பல்வேறு விதங்களில் ரெசிபிக்களை செய்யலாம். வ்வ்வ்வ்ன்றும் அதற்குரிய தனித்துவமான சுவையை கொண்டு இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் வைத்து சூப்பரான சுவையில் மிக எளிமையான ஒரு ரெசிபியை காண உள்ளோம். இதனை பேச்சுலர்ஸ் கூட வீட்டில் இருக்கும் மசாலா வகைகளை சேர்த்து உடனடியாக செய்து விடலாம். 

வாருங்கள்! ஈஸியான மற்றும் டேஸ்ட்டான ஆனியன் சிக்கன் ப்ரை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1/2 கிலோ
  • தனியா தூள் - 2 ஸ்பூன்
  • கரம் மசாலா - 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு 

மசாலா செய்வதற்கு :

  • சீரகம் - 1 ஸ்பூன்
  • வெங்காயம் - 4 
  • பச்சை மிளகாய் - 3 (கீறியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு 
  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 
  • எண்ணெய் - தேவையான அளவு

நாவை சுண்டி இழுக்கும் மட்டன் பட்டர் கீமா இப்படி செய்து அசத்தலாம் வாங்க!

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசிக் கொள்ள வேண்டும். அலசிய சிக்கனை ஒரு பௌலில் போட்டுக் கொண்டு அதில் தனியா தூள் கரம் மசாலா தூள், மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். 

இப்போது கடாயில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டி விட்டு ஒரு தட்டு போட்டு மூடி வைத்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 30 நிமிடங்கள் வரை சிக்கனை வேக வைக்க வேண்டும்.அவ்வப்போது கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

சிக்கன் நன்றாக வெந்த பிறகு தீயினை உயர்த்தி வைத்து சிக்கன் முழுமையாக ட்ரையாகும் வரை பிரட்டி விட்டு இறக்கி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்தால் ஈஸியான ஆனியன் சிக்கன் ப்ரை ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios