நாவை சுண்டி இழுக்கும் மட்டன் பட்டர் கீமா இப்படி செய்து அசத்தலாம் வாங்க!
வாருங்கள்! ருசியான மட்டன் பட்டர் கீமாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உறவுகள் ஒன்றாக கூடி கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கலும் ஒன்று. அப்படி அனைவரும் ஒன்றாக இருக்கும் போது ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்து சாப்பிட்டால் அது மேலும் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஸ்பெஷல் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். ஆம்! சுவையான மட்டன் பட்டர் கீமாவை தான் இன்று நாம் காண உள்ளோம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் சுவை அட்டகாசமாக இருக்கும். மேலும் இதனை சப்பாத்தி, நாண்,புல்கா போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
வாருங்கள்! ருசியான மட்டன் பட்டர் கீமாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- கீமா - 1/2 கிலோ
- பட்டர் - 1 கப்
- தயிர் - 1/4 கிலோ
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
- தக்காளி - 2
- பிரியாணி இலை - 1
- லவங்கம்- 5
- பட்டை - 1 இன்ச்
- ஏலக்காய் - 2
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
- மல்லித்தழை-கையளவு
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் " சில்லென்ற சிக்கன் சாலட் " எப்படி செய்வது! பார்க்கலாம் வாங்க!
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அதில் லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அரிந்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு , இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இஞ்சி பூண்டின் வாசனை சென்ற பிறகு, தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் அகன்ற கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அலசி வைத்துள்ள கீமாவை சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கி விட்டு அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வேக விட வேண்டும்.
இப்போது கீமாவில் பட்டர் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதனை வெங்காயம் மற்றும் மசாலா உள்ள கடாயில் சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். இப்போது மட்டன் கீமாவில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் நன்றாக வற்றி வரும் வரை கீமாவை வேக வைத்து பின் அதில் கெட்டி தயிர் சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட்டு அனைத்தும் நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இறுதியாக இதன் மேல் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித் தழையை தூவி பரிமாறினால் , பட்டர் கீமா மசாலா ரெடி!