வெறும் 5 நிமிடங்களில் காலை டிபன் ரெடி செய்யலாம் வாங்க!

வாருங்கள்! சுவையான முள்ளங்கி அடையை வெகு சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Radish Adai in Tamil

தினமும் இட்லி,தோசை, பொங்கல்,பூரி,வடை என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் புதுசா, வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.

காலை டிபனுக்கு முள்ளங்கி வைத்து அருமையான அடையை செய்து கொடுங்க. முள்ளங்கி, கேரட் போன்ற காய்களை குழந்தைகள் சிலர் சாப்பிட மறுப்பார்கள் .அவர்களுக்கு இந்த மாதிரி முள்ளங்கி சேர்த்து அடை போன்ற ரெசிபிக்களை செய்து கொடுத்தால் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த அடையை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி ஆகும். மேலும் இதை காலை டிபன் அல்லது மாலை ஸ்னாக்ஸ்க்கும் செய்து கொடுக்கலாம். 

வாருங்கள்! சுவையான முள்ளங்கி அடையை வெகு சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி-2
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
இஞ்சி-1 துண்டு 
பூண்டு-4 பற்கள் 
கடலை மாவு-2 ஸ்பூன் 
அரிசி மாவு-2 ஸ்பூன் 
மல்லித்தழை-கையளவு 
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய்- தேவையான அளவு 

ருசியான ஆல்மண்ட் பனானா கேக் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்

செய்முறை:

முதலில் முள்ளங்கியை அலசி விட்டு, பின் அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.அதே போன்று இஞ்சியை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ,மல்லித்தழை மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு அகலமான கிண்ணத்தில் துருவிய முள்ளங்கி, வெங்காயம், பச்சை மிளகு, துருவிய இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிது உப்பு தூவி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் கலவையில் கடலை மாவு சேர்த்துக் கொண்டு பின் அதில் அரிசி மாவும் சேர்க்க வேண்டும். இப்போது தண்ணீர் சேர்க்காமல் அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

இப்போது இதில் சிறிது எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இப்போது இதனை சிறு ஒரே அளவில் உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சிறிது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு உருண்டையை எடுத்து அடை போன்று தட்டி தோசைக்கல்லில் வைத்து சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும். 

ஒரு பக்கம் வெந்த பிறகு, மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! ருசியான முள்ளங்கி அடை ரெடி!!! இதற்கு கார சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios