Asianet News TamilAsianet News Tamil

ருசியான ஆல்மண்ட் பனானா கேக் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்!

ஆல்மண்ட் பனானா கேக் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இதன் சுவை அலாதியாக இருக்கும். வாருங்கள்! ஆல்மண்ட் பனானா கேக்கை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to do Almond Banana Cake in Tamil
Author
First Published Dec 22, 2022, 12:02 AM IST

கிறிஸ்துமஸ் என்றால் கேக் மற்றும் பரிசு தான் நாம் அனைவருக்கும் நினைவில் வரும். வழக்கமாக கேக்கினை நாம் வெளியில் இருந்து தான் வாங்கி வந்து சாப்பிடுவோம். இந்த முறை கிறிஸ்துமஸ்க்கு வெளியில் அல்லது கடைகளில் கேக் வாங்காமல் நாமே நம் வீட்டில் சுத்தமாக, பிரெஷாக,சூப்பராக ஒரு கேக்கினை செய்யலாம். 

எல்லாரும் விரும்பி சாப்பிடும் ரெசிபிகளில் கேக்கும் ஒன்று. கேக்கில் பல விதங்கள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஆல்மண்ட் பனானா கேக் காண உள்ளோம்.

இந்த ஆல்மண்ட் பனானா கேக் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இதன் சுவை அலாதியாக இருக்கும். வாருங்கள்! ஆல்மண்ட் பனானா கேக்கை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்- 1 1/4 கப் 
பாதாம்- 1/2 கப்
முட்டை-3
பட்டர்- 1/2 கப் 
சர்க்கரை-3/4 கப்
வெல்லம்-1/2 கப் 
ஆல் பர்பஸ் பிளார் - 3 கப் 
மோர்- 1 1/2 கப் 
பட்டை தூள்-1 1/2 ஸ்பூன் 
ஜாதிக்காய் தூள்-1 1/2 ஸ்பூன் 
பேக்கிங் பவுடர்- 1 1/4 ஸ்பூன் 
ஆரஞ்சு ஜெஸ்ட்-2 ஸ்பூன் 
உப்பு- 1/2 ஸ்பூன்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!

செய்முறை 

முதலில் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாமை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் சிறிது பட்டரை சேர்த்து உருகிய பின் அதனை கேக் ட்ரேயில் சேர்த்து அனைத்து பக்கங்களிலும் ஸ்ப்ரெட் செய்து விட வேண்டும். 

ஓர் பாத்திரத்தில் துருவிய வெல்லம், ஜாதிக்காய், பொடித்த பாதாம் , பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பீட் செய்து கொண்டு அதில் பாதியை ட்ரேயில் ஊற்றி விட வேண்டும். மீதமுள்ளதை பட்டரில் சேர்த்து வைத்து விட வேண்டும். 

ஒரு பௌளில் மீதமுள்ள பட்டர்,முட்டை ,சர்க்கரை மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையில் பேக்கிங் பவுடர்,ஆல் பர்பஸ் மாவு, மோர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும்

இப்போது இந்த கலவையை பட்டர் ஸ்ப்ரெட் செய்து வைத்துள்ள வாணலியில் பாதி அளவு ஊற்ற வேண்டும். பின் ஒரு கனமான கரண்டி வைத்து மேற்புறத்தை சமமாக ஸ்ப்ரெட் செய்து விட வேண்டும். 

பின் மைக்ரோ ஓவனில் 180 ° F செட் செய்து கேக் ஊற்றிய டின்னை அல்லது ட்ரேயை ஓவனில் வைத்து சுமார் 7 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர் ஓவனில் இருந்து வெளியே எடுத்து பிளேட்டில்வைத்து பரிமாறினால் சூப்பரான பனானா கேக் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios