Asianet News TamilAsianet News Tamil

Christmas Cake and desserts Recipes | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வீட்டில்லேயே செய்து கொண்டாடலாம் வாங்க!

வாருங்கள்! கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த கேக்கை வீட்டில் எளிமையாக மற்றும் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Christmas Special cake in Tamil
Author
First Published Dec 19, 2022, 2:33 PM IST

கிறிஸ்துமஸ் வர இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.கிறிஸ்துமஸ் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவில் வருவது கிறிஸ்துமஸ் ட்ரீ, ஸ்டார், பல விதமான பரிசுகள் மற்றும் கேக் தான் .

கேக் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி என்றாலும் குறிப்பாக குழந்தைகள் தான் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

கேக்கில் வெண்ணிலா, ஸ்ட்ராபேரி , மார்பில் கேக், பட்டர் ஸ்காட்ச் கேக், பைன் ஆப்பிள் கேக் என்று பல விதமான கேக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய தனி சுவையை உள்ளடக்கி இருக்கும். அந்த வகையில் இன்று நாம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலான சாக்லேட் கேக் முட்டை சேர்த்து எப்படி செய்வதென்று பார்க்க உள்ளோம்.

வாருங்கள்! கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த கேக்கை வீட்டில் எளிமையாக மற்றும் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை - 3 
மைதா -1/4 கிலோ
சர்க்கரை - 200 கிராம் 
பட்டர் - 150 கிராம்
கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன் 
சூடான நீர் - 1/2 கப் 
சாக்கோ சிப்ஸ்- கையளவு 

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக் " வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!

செய்முறை: 

முதலில் ஒரு சின்ன கிண்னத்தில் கோக்கோ பவுடரை சேர்த்து அதில் வெந்நீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.  மைதா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சல்லடையில் சேர்த்து சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் சர்க்கரை சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் பொடித்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.  அதே பாத்திரத்தில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். (கட்டி இல்லாமல் அடிக்க வேண்டும்.)

பின் அந்த பாத்திரத்தில் கோக்கோ கலவையையும், மைதா கலவையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பட்டர் சர்க்கரை கலவையில் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். (கட்டிகள் ஏற்படாமல் இருத்தல் வேண்டும்)

அடிகனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பரப்பிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மைதா மாவு தூவி விட வேண்டும். அடுத்தாக அந்த பாத்திரத்தில் ரெடியாக உள்ள கேக் கலவையை பாதிஅளவு வரும் வரை ஊற்றி விட வேண்டும். (கேக் வெந்த பிறகு உப்பி வரும்) 

பாத்திரத்தை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 160 டிகிரியில் வைத்து சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்ய வேண்டும். பின் அவனில் இருந்து எடுத்துக் கொண்டு விருப்பமானால் சாக்கோ சிப்ஸ் தூவி விடலாம். அவ்ளோதான் !சூப்பரான சுவையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios