Pongal Special | பொங்கல் தொடர் விடுமுறைக்கு தித்திப்பான ஸ்வீட் செய்து சாப்பிடலாம் வாங்க!

வாருங்கள்! சுவையான பொரி அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

How to make Puffed Rice Halwa in English

பொங்கல் என்றால் கரும்பு, சர்க்கரை பொங்கலுக்கு அடுத்தபடியாக நம் அனைவருக்கும் நினைவில் வருவது இனிப்பு வகைகள் தான். பொங்கல் பண்டிகைக்கு விடப்படும் தொடர் விடுமுறையினால் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று அனைவரும் நமது வீட்டில் ஒன்று கூடி கொண்டாடுவோம். அதற்காக பல வகையான ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் வகையை நாம் கடைகளில் இருந்து வாங்கி சுவைப்போம்.

இந்த பொங்கலுக்கு கடைகளில் இருந்து வாங்காமல் நாமே நம் வீட்டில் எளிமையான ஒரு ஸ்வீட் ரெசிபியை பக்குவமாக செய்யலாம் வாங்க. என்ன ஸ்வீட் என்று யோசிக்கிறீர்களா?  வீட்டில் இருக்கும் பொரியை வைத்து மிக சுலபமாக ஒரு அல்வா ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த பொரி அல்வா கோதுமை அல்வா, பிரட் அல்வா போன்றவைகளுக்கு இனையான சுவையில் இருக்கும். வீட்டின் மற்ற விஷேஷ நாட்களிலும் இந்த அல்வாவை செய்து சுவைத்து மகிழலாம்.

வாருங்கள்! சுவையான பொரி அல்வாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பொரி - 2 கப்
  • வெல்லம் - 1/2 கப் 
  • நெய் - தேவையான அளவு
  • முந்திரி - கையளவு

       இந்த பொங்கலுக்கு மணமணக்கும் மசாலா பொங்கல் செய்யலாம் வாங்க.

செய்முறை:

முதலில் பொரியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் மற்றும் முந்திரி பருப்பினை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி காய்த்துக் கொள்ள வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்து பாகு பதம் வந்த பிறகு, அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் பொரியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் பிழிந்து வைத்துள்ள பொரியை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், பொடித்த முந்திரியை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தயார் செய்த வெல்ல பாகினை சேர்த்து அரைத்த பொரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

கை விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கலவையானது கெட்டியாக மாறி அல்வா பதத்திற்கு வரும் நேரத்தில் சிறிது நெய் ஊற்றி மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அவ்ளோதாங்க! தித்திப்பான பொரி அல்வா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios