Asianet News TamilAsianet News Tamil

பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் வைத்து ஹெல்த்தி கட்லெட் செய்யலாம் வாங்க!

வாருங்கள்! ஹெல்த்தி அண்ட் டேஸ்ட்டி பன்னீர் கட்லெட் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Paneer Cutlet in Tamil
Author
First Published Jan 24, 2023, 7:20 PM IST

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகைகளில் பன்னீரும் ஒன்று. பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து க்ரன்ச்சியான கட்லெட் ரெசிபியை காண உள்ளோம்.இதனை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அனைத்தையும் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடித்து மறுமுறை கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

வாருங்கள்! ஹெல்த்தி அண்ட் டேஸ்ட்டி பன்னீர் கட்லெட் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • பன்னீர் - 250 கிராம்
  • பிரட் துண்டுகள் - 2
  • வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய்-2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • சாட் மசாலா - 1 ஸ்பூன்
  • மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • மைதா - 2 ஸ்பூன்
  • புதினா – கையளவு
  • பிரெட் க்ரம்ஸ் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

நாவை சுண்டி இழுக்கும் "செட்டிநாடு கோழி உப்புக்கறி"

செய்முறை:

முதலில் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், புதினா மற்றும் பச்சை மிளகாயை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்தாக பிரட் துண்டுகளை தண்ணீரில் டிப் செய்து எடுத்து அதில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு விலாசமான பாத்திரத்தில் துருவி வைத்துள்ள பன்னீர், பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, பிழிந்து வைத்துள்ள பிரட் துண்டுகள், ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின் அந்த கலவையில் மிளகு தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள், மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்லெட் பதத்திற்கு மாவு பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன பௌலில் மைதா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் எடுத்து கட்லெட் போல் தட்டி வைத்துக் கொண்டு அதனை மைதா கரைசலில் டிப் செய்து எடுத்துக் கொண்டு பின் அதனை பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து மாவினையும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கட்லெட்டுகளை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொண்டு சாஸ் வைத்து பரிமாறினால் ஹெல்த்தி அண்ட் டேஸ்ட்டி பன்னீர் கட்லெட் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios