Asianet News TamilAsianet News Tamil

நாவை சுண்டி இழுக்கும் "செட்டிநாடு கோழி உப்புக்கறி"

வாருங்கள்! செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.

How to make Chettinad Chicken Salt Curry in Tamil
Author
First Published Jan 24, 2023, 5:42 PM IST

சண்டே என்றால் அசைவ உணவு வகைகளை சாப்பிட்டால் தான் அசைவ பிரியர்களுக்கு திருப்தியாக இருக்கும். வழக்கமாக அசைவம் என்றால் குழம்பு, கிரேவி, சில்லி, மசாலா என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவின் மூலம் செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை காண உள்ளோம். இதனை செய்வது மிக சுலபம் மேலும் இதன் சுவையோ அலாதியாக இருக்கும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இது வழக்கமாக செய்கின்ற ரெசிபிக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டடாக இருக்கும்.

வாருங்கள்! செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 10
  • தக்காளி-1
  • வரமிளகாய் – 10
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
  • இஞ்சி – 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • பூண்டு – 5 பற்கள்
  • கறிவேப்பிலை -1 கொத்து
குட்டிஸ்களின் ஆல் டைம் பேவரைட் நூடுல்ஸ் ரோல்! செய்முறை:
முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து விட்டு நன்றாக அலசி ஒரே மாதிரியான அளவில் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெட்டிய கறித்துண்டுகளில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைத்துக் கொண்டு ½  மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வெங்காயம், தக்காளி,பூண்டு மற்றும் இஞ்சியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி எடுத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து அனைத்தும் நன்கு வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் ஊற வைத்துள்ள கோழிக்கறியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்தாக அதில் மிக பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும். இப்போது மல்லித்தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கறி வேக வைக்க வேண்டும். கடாயில் இருக்கும் தண்ணீர் வற்றி, கோழிக்கறி நன்கு வெந்து வந்தவுடன் அதில் கறிவேப்பிலையை தூவி ஒரு முறை பிரட்டி விட்டு இறக்கினால் சுவையான உப்புக்கறி ரெடி!
Follow Us:
Download App:
  • android
  • ios