Asianet News TamilAsianet News Tamil

இந்த தீபாவளிக்கு பாரம்பரியமான கருப்பட்டி சீனி மிட்டாய் செய்யலாம் வாங்க!

இந்த தீபாவளி பண்டிகைக்கு மண் மணம் மாறாத கருப்பட்டி சீனி மிட்டாயை நம் கை பக்குவத்தில் வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதியவன் மூலம் தெரிந்து கொள்வோம்.

How to make Palm jaggery candy in Tamil
Author
First Published Oct 19, 2022, 5:24 PM IST

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சில இனிப்பு பண்டங்களான அதிரசம், லட்டு மற்றும் காரசாரமான சீடை, சேவு போன்றவற்றை வீட்டிலேயே செய்து குடும்பத்துடன் சுவைத்து மகிழ்வோம். 

ஆனால் தற்போது இந்த நவீன மற்றும் அவசர உலகத்தில் நம் பாரம்பரிய பலகாரங்களில் இருந்து சிலவற்றை நாம் படிப்படியாக மறந்து வருகிறோம். அதில் கருப்பட்டி சீனி மிட்டாய் என்ற இனிப்பு பண்டமும் ஒன்று.அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு மண் மணம் மாறாத கருப்பட்டி சீனி மிட்டாயை நம் கை பக்குவத்தில் வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதியவன் மூலம் தெரிந்து கொள்வோம். 

ஜோவென பெய்யும் மழைக்கு இடையில் ஒரு ''அரபிக் டீ'' சாப்பிடலாமா?

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி - 2 கப் 
இட்லி அரிசி - 1 கப் 
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
தண்ணீர் - 1 கப்
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்றாக அலசிவிட்டு, பின் தண்ணீரில் 3 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின் அதிலிருக்கும் நீரை முழுவதும் வடித்து, விட்டு பருப்பு மற்றும் அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும். பின் மாவினை சுமார் 1 மணிநேரம் ஊற விட வேண்டும். 

இந்த தீபவளிக்கு டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்ஃபி ! செய்யலாம் வாங்க!

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கருப்பட்டியை கொஞ்சம் தட்டி போட்டு தண்ணீர் ஊற்றி , கருப்பட்டியை கரைய விட வேண்டும். கருப்பட்டி கரைந்த பின் ,அதனை இறக்கி கொஞ்சம் குளிர செய்து , வடிகட்டி பின் மீண்டும்கடாயில் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வரை வைத்து கெட்டியாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் சிறிது ஏலக்காய் பொடிநன்றாக மற்றும் சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த உடன் , தனியாக எடுத்து வைத்துள்ள மாவை ஒரு தடினமான பாலிதீன் கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஒரு ஹோலிட்டு, எண்ணெய் காய்ந்தபின் , அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமாக மாறிய உடன் அதனை எடுத்து கருப்பட்டி பாகுவில் சேர்த்து 2 நிமிடங்கள் முன்னும், 2 நிமிடங்கள் பின்னும் திருப்பிப் விட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும். 

இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி சீனி மிட்டாய் ரெடி!!! அவ்ளோதாங்க சுவையான மற்றும் பாரம்பரியமான கருப்பட்டி சீனி மிட்டாயை உங்கள் குடும்பத்தாருக்கு கொடுத்து சுவைத்து மகிழுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios