Asianet News TamilAsianet News Tamil

சுட சுட மொறு மொறு ஆனியன் சமோசா செய்யலாம் வாங்க!

வாருங்கள்! சுட சுட மொறு மொறு ஆனியன் சமோசா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Onion Samosa in Tamil
Author
First Published Jan 31, 2023, 2:38 PM IST

நம்மில் பலருக்கும் மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு ஸ்னாக்ஸ் வகையை சுட சுட சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்போம். பொதுவாக பஜ்ஜி, போண்டா,சமோசா என்று தான் அதிகமாக சாப்பிடுவோம். சமோசாவில் உருளைக்கிழங்கு சமோசா, கார்ன் சமோசா, வெஜ் சமோசா, முட்டை சமோசா என்று பல விதங்களில் சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஆனியன் சமோசாவை பார்க்க உள்ளோம்.

வாருங்கள்! சுவையான ஆனியன் சமோசா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

​​​​​​​        தேவையான பொருட்கள் :

  • மைதா -1 கப்
  • நெய் - 2 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்- 2 கப்
  • பச்சை மிளகாய்-1
  • மிளகாய் தூள்-1/4 ஸ்பூன்
  • மல்லி தூள்-1/4 ஸ்பூன்
  • கரம் மசாலா-1/4 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  •  சீரகம் - 1 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

        ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ரூமாலி ரொட்டி செய்யலாம் வாங்க!

செய்முறை :

முதலில் பவுளில் மைதா மாவு எடுத்துக் கொண்டு அதில் சிறிது நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்  வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மாவினை ஒரு ஈரத்துணியை வைத்து மூடி விட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். வெங்காயம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்போது ஊற வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து சிறிய அளவிலான உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாக தேய்த்து , இரண்டாக வெட்டி, 1 பாதியில் மசாலா கலவையை வைத்து சமோசா செய்து தனியாக ஒரு பெரிய தட்டில் வைத்து கொள்ள வேண்டும். இதே போன்று அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின், அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு சமோசாக்களை ஒவ்வொன்றாக போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்!ருசியான மொறு மொறு சமோசா ரெடி!.

Follow Us:
Download App:
  • android
  • ios