Asianet News TamilAsianet News Tamil

Mysore Maddur Vada : மைசூரின் மதூர் வடை! செய்யலாம் வாங்க!

மைசூர் என்றவுடன் நினைவில் வருவது மைசூர் அரண்மனை மற்றும் மைசூர் தூய சந்தனம்.அடுத்தாக மைசூரில் மதூர் வடை ரொம்ப பேமஸ்.இது கர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகைகளில் இதுவும் இடம் பெறுகிறது. இன்றைய பதிவில் நாம் மைசூரின் பிரபலமான மைசூர் மதூர் வடையை காண உள்ளோம். 

How to make Mysore Maddur Vada in Tamil
Author
First Published Oct 1, 2022, 5:08 PM IST

மாலை வேளையில் தேனீர்,காபி அருந்தும் போது அதனுடன் கிரிஸ்பியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? வடை பிரியரா நீங்கள்?அப்படியானால் இந்த மைசூர் மதூர் வடையை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

மற்ற வடைகளுக்கு நாம் பருப்பை ஊற வைத்து பக்குவமாக அரைத்து வடை சுட வேண்டும்.ஆனால் மதூர் வடைக்கு எதையும் அரைக்க தேவை இல்லை.குறைவான நேரத்தில் சுலபமாக சுவையாக இந்த மதூர் வடையை வீட்டில் எப்படி செய்யலாம்?என்று பார்க்கலாம் வாங்க!

வீட்டிளுள்ள 3 பொருளில் 10 நிமிடத்தில் “திடீர் அல்வா” ரெடி!


தேவையான பொருட்கள்:

ஒரு கப் பச்சரிசி மாவு
1/4 கப் மைதா
1/4 ரவா
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
2 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
1 கொத்து கருவேப்பிலை
சிறிது மல்லி தழை 
1 சிட்டிகை பெருங்காய தூள் 
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் வடை சுடுவதற்கான எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவா மற்றும் மைதா போன்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பெண்களே உங்களின் ஹார்மோன் ஆரோக்கியம் காக்க இந்த கொட்டை போதும்!

அதன் பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு, பெருங்காயத் தூள்,கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

கொதிக்கும் எண்ணெய் சிறிது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் .சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை தட்டி கொதிக்கும் எண்ணெயில் இட வேண்டும்.ஒரு புறம் பொன்னிறமாக சிவந்த உடன், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவ்ளோதாங்க குறைவான நேரத்தில் சுவையான மைசூர் மதூர் வடை வீட்டிலேயே தாயர்!  நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios