Asianet News TamilAsianet News Tamil

வெண்ணிலா கேக், சாக்லேட் கேக் தெரியும். இது என்ன மார்பிள் கேக்?

சாக்லேட் மற்றும் வெண்ணிலா கேக்குகளை தனித்தனியயாக சுவைத்து இருப்பீர்கள். இரண்டின் சுவையையும் ஒரே கேக்கில் செய்தால்,எப்படி இருக்கும்? ஆமாங்க ! வெண்ணிலா மற்றும் சாக்லேட் கேக்குகளின் சுவைகளையும் ஒரே கேக்கில் செய்வது தான் ஜீப்ரா கேக் எனப்படும் 

How to make Marble Cake in Tamil
Author
First Published Oct 12, 2022, 3:42 PM IST

சாக்லேட் மற்றும் வெண்ணிலா கேக்குகளை தனித்தனியயாக சுவைத்து இருப்பீர்கள். இரண்டின் சுவையையும் ஒரே கேக்கில் செய்தால்,எப்படி இருக்கும்? ஆமாங்க ! வெண்ணிலா மற்றும் சாக்லேட் கேக்குகளின் சுவைகளையும் ஒரே கேக்கில் செய்வது தான் ஜீப்ரா கேக் எனப்படும் மார்பில் கேக் .2 கேக்குகளின் சுவை ஒரே கேக்கில் இருப்பதால் இதன் சுவை சற்று தூக்கலாக இருக்கும். குழந்தைகள் மிகவும் பிடித்த , விரும்பி உண்ணக்கூடிய இந்த கேக்கை வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Mango: பச்சை மாங்காயில் கொட்டிக் கிடக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!

மார்பில் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

மைதா – 250 கிராம் 
முட்டை – 4
பால் – 125 மில்லி 
பட்டர் – 150 கிராம் 
சர்க்கரை – 250g
கொக்கோ பவுடர் – 3 ஸ்பூன் 
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன் 
வெண்ணிலா எசன்ஸ் – 1ஸ்பூன் 

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பட்டர் சேர்த்துக் கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஹேண்ட் மிக்ஸர் கொண்டு சாஃப்டாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீதமிருக்கும் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சாஃப்டாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது வெண்ணிலா எசன்ஸ் மற்றும் ஒரு முட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையை சாஃப்டாக அடித்த பின் மீதமிருக்கும் முட்டைகளை ஒவ்வொன்றாக தனித்தனியே சேர்த்து மாவு பிளப்பி (fluffy) போல் ஆகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். 

வித்தியாசமான முறையில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு!

இதனுடன் பால் மற்றும் சலித்த மைதா மாவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இதில் பேக்கிங் பவுடர் சேர்த்து சாஃப்டாக மிக்ஸ் செய்து கிளறி விட வேண்டும். நன்றாக பிசைந்த பின்னர் பாதி மாவை எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். (வெண்ணிலா கேக் மாவு) இப்போது மீதமுள்ள பாதி மாவில் சிறிது கோகோ பவுடர் சேர்த்து ஓவனில் 360F/180 C பிரிஹீட் செய்யவும்.(சாக்லேட் கேக் மாவு)

ஒரு கேக் டின்னில் லைட்டாக எண்ணெய் தடவி அதன் மீது லைனர் போட்டு விட்டு, ரெடியாக உள்ள சாக்லேட் கேக் மாவு மற்றும் வெண்ணிலா கேக் மாவு இரண்டையும் ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த லேயராக வைக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்டிக் வைத்து கலக்கவும். ஓவனில் சுமார் 45 முதல் 60 நிமிடங்கள் வரை வைத்து வேக விட வேண்டும்.

பின்னர் ஆற வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொண்டு , சாப்பிட்டால் சுவையான ஜீப்ரா கேக் எனப்படும் மார்பில் கேக் தயார்!

Follow Us:
Download App:
  • android
  • ios