வீட்ல பாலும், மாம்பழமும் இருக்கா! அப்போ இப்படி செய்து கொடுங்க! ஒன்னு கூட கிடைக்காது!
வாருங்கள்! கொளுத்தும் கோடையில் குளுகுளு மேங்கோ ஐஸ்க்ரீம் அல்லது குல்ஃபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடைக்காலம் என்றால் என்ன தான் ஒரு பக்கம் வெயிலை நினைத்து பயந்தாலும், மற்றொரு பக்கம் தித்திப்பான மாம்பழங்களை சுவைக்கலாம் என்று மகிழ்ச்சி கொள்வோம்.
இப்போது கோடைக்காலம் என்பதால் சுவைமிக்க மாம்பழங்கள் அதிகமான இடங்களில் விற்கப்படுவதை காணலாம். இப்படி சீசனில் கிடைக்கும் பழங்கள் சற்று விலை மலிவாக இருக்கும்.
இப்படி மலிவாக மாம்பழங்கள் கிடைக்கும் போது, மாம்பழங்களை அள்ளிக் கொண்டு வருவோம். இந்த மாம்பழங்களை வைத்து மில்க் ஷேக், ஸ்மூத்தி ,கேக் , ஜூஸ் போன்றவற்றை செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் வெளுத்து எடுக்கும் வெயிலில் குளுகுளுவென மேங்கோ ஐஸ் க்ரீம் செய்து கொடுத்தால் யார்தான் சாப்பிடாமல் இருப்பார்கள்.
வாருங்கள்! கொளுத்தும் கோடையில் குளுகுளு மேங்கோ ஐஸ்க்ரீம் அல்லது குல்ஃபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு கடைகளில் இருந்து ஐஸ்க்ரீம்களை வாங்கிக் கொடுக்காமல் நீங்களே வீட்டில் இப்படி மாம்பழம் வைத்து ஐஸ்க்ரீம் செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.
தேவையான பொருட்கள்:
மாம்பழ பல்ப் - 1 1/2 கப்
பால் - 500 மிலி
சர்க்கரை - 3/4 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
மாம்பழ எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
ஐஸ்க்ரீம் ஸ்டிக்ஸ்- 5
குல்ஃபிமோட்- 5
செய்முறை:
முதலில் மாம்பழங்களை அலசி விட்டு அதன் தோலை நீக்கி பழத்தை வெட்டிக் கொண்டு மிக்சி ஜாரில் சேர்த்து மாம்பழ பல்ப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து பால் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்த பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பௌலில் கார்ன் பிளார் சேர்த்து அதில் சிறிது பால் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து அதனை காய்ச்சிய பாலில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு, சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து அடுப்பில் இருந்து சாஸ் பான் ஐ எடுத்து விட வேண்டும்.
பாலை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பால் ஆறிய பிறகு, மாம்பழ பல்ப் மற்றும்மாம்பழ எசன்ஸ் ஒரு துளி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும் . இந்த கலவையை அப்படியே ஃப்ரீசரில் வைத்துவிட்டு , பின் ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஸ்கூப் வைத்து எடுத்து சின்ன பௌல்களில் வைத்து எடுத்தால் மேங்கோ ஐஸ்க்ரீம் ரெடி!
அல்லது
குல்பி மோல்டுகளில் இதனை ஊற்றி (அல்லது கிளாஸ் ) ஃப்ரீசரில் வைத்து 3 மணி நேரம் கழித்து எடுத்து அதில் ஐஸ் க்ரீம் சொருகி சுவைத்தால் சில் சில் மேங்கோ குல்ஃபி ரெடி!
குழந்தை பிறந்த பிறகு அரைஞாண் கயிறு ஏன் கட்டுகிறோம்? இதில் இத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளனவா?