Maduai Alagar Kovil Dosa : மதுரை அழகர் கோவில் தோசை!
ஆன்மிக அன்பர்கள் அழகர்கோயில் வந்து சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டுச் சென்றால் , நமது சங்கடங்கள் நிச்சயமாக தீரும் என்று கூறுகிறார்கள்.
மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது அழகர் கோவில் தான். மதுரை நாயக்க மன்னர்கள் ,பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் இக்கோவிலின் திருப்பணிகளை மேற் கொண்டனர். இத்திருத்தலத்தின் மூலவருக்கு நைவேத்தியமாக செய்யும் சம்பா தோசை என்று சொல்லப்படும் நெய் பலகாரம் சற்று வித்தியாசமான சுவையில் இருக்க கூடிய ஒன்றாகும்.
பல கோவில்களில் தற்போது இந்த தோசை விற்கப்பட்டாலும் அழகர்கோயிலில் கிடைக்கும் இந்த சம்பா தோசை பிரசித்தி பெற்றது.இதனை இங்கு வரும் பாத கோடி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளும் இதனை மிகவும் விரும்பி வாங்கும் அளவிற்கு சுவையாக இருக்கிறது.
ஆன்மிக அன்பர்கள் அழகர்கோயில் வந்து சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டுச் சென்றால் , நமது சங்கடங்கள் நிச்சயமாக தீரும் என்று கூறுகிறார்கள்.
வெயிட் லாஸ் செய்ய பெஸ்ட் சாய்ஸ் - சுரைக்காய் தோசை !
தேவையான பொருட்கள்:
3 கப் - சம்பா அரிசி
2 கப் - கருப்பு உளுத்தம்பருப்பு (தோலுடன்)
2 ஸ்பூன் - மிளகு
1/4 ஸ்பூன்- சுக்குப் பொடி
ஒரு கொத்து - கறிவேப்பிலை
தேவையான அளவு - நெய்
தேவையான அளவு - உப்பு
செய்முறை:
சம்பா அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து விட்டு , தண்ணீரை வடிகட்டி, மிக்ஸி ஜாரில் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். உரலில் மாவை அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும். (கோயிலில் மாவினை உரலில் போட்டு தான் இடி ப்பார்கள்) உளுந்தை நன்றாக அலசி கொண்டு பாதி அளவு பருப்பை மட்டும் தோல் நீக்கிவிட்டு, மீதமுள்ள பருப்பை அதிலேயே சேர்த்து நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பஞ்சாபின் தால் மக்கனி! - பஞ்சாப் வரை போக வேணாம்... நம் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!
இந்த உளுந்து மாவோடு அரைத்து வைத்துள்ள அரிசி மாவினையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு பின் தேவையான அளவு உப்பு சேர்த்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். இந்த கலவையானது வடை மாவு போன்ற பதத்தில் கெட்டியாக இருத்தல் அவசியம். 6 மணி நேரம் கழித்து தோசை சுடுவதற்கு முன்பு பின் மாவில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு மற்றும் சுக்குப் பொடி சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து, தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக சிவந்து மொறுமொறுவென மாறும் போது , மறுபக்கம் பிரட்டி போட்டு, மீண்டும் சுற்றி நெய் விட்டு, மொறுமொறுவென எடுத்தால் சுவையான அழகர் கோவில் தோசை ரெடி!