Asianet News TamilAsianet News Tamil

பஞ்சாபின் தால் மக்கனி! - பஞ்சாப் வரை போக வேணாம்... நம் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!

தமிழகத்தில் பெரிய ரெஸ்டாரன்ட்டுகளில் மட்டும் கிடைக்கின்ற இந்த தால் மக்கனியை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

How to make Dal Makkani recipe in Tamil
Author
First Published Oct 7, 2022, 4:50 PM IST

தால் மக்கனி வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ரெசிபி.கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் இந்த தால் மக்கனியை புல்கா, நாண், பரோட்டா மற்றும் சப்பாத்தி போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்.  கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இன்றி தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.அந்த அளவிற்கு அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு தான் இந்த தால் மக்கனி . 

பொதுவாக நாம் சப்பாத்தி மற்றும் புல்காவுக்கு சைடிஷ் ஆக செய்யும் காலி பிளவர் குருமா,பட்டாணி குருமா, வெஜிடபிள் குருமா போன்றவற்றில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். தமிழகத்தில் பெரிய ரெஸ்டாரன்ட்டுகளில் மட்டும் கிடைக்கின்ற இந்த தால் மக்கனியை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

கருப்பு உளுந்தின் மகத்துவம்:

கருப்பு உளுந்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் உடலில் மூட்டுகள் மற்றும் எலும்புகள் வலிமை பெரும். கருப்பு உளுந்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுவதால், இரத்த சோகை நோயை குணப்படுத்தும். மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பாசி பருப்பு கச்சோரி செய்வது எப்படி?

தால் மக்கனி செய்ய தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து 3/4 கப்
பெரிய வெங்காயம்-3
தக்காளி-2
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன் 
மிளகாய் தூள்-2 ஸ்பூன் 
தனியா தூள் -2 ஸபூன் 
கரம் மசாலா- 1/2 ஸ்பூன் 
சீரக தூள் -1 ஸ்பூன் 
பட்டர் -3 ஸ்பூன் 
Fresh Cream-தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
சிறிதளவு -கொத்தமல்லி

குட்டிஸ்க்கான சத்தான ராகி டிலைட் ரெசிபி!

செய்முறை:

முதலில் கருப்பு உளுந்தை தண்ணீரில் 7 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு குக்கரில் ஊற வைத்த கறுப்பு உளுந்தை மாற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 6 விசில் வரை வேக வைத்துக் கொண்டு அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின் மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு pan ஐ அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் சிறிது எண்ணெய் மற்றும் சிறிது பட்டர் சேர்த்து சூடு செய்ய வேண்டும். எண்ணெய் காய்ந்த உடன் , வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கி விட வேண்டும். பின் அதில் நாம் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு , அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து , தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு, அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு அதனை நன்றாக கிளறி விட்டு எண்ணெய் பிரியும் வரை வேக விட வேண்டும்.

வீட்டிலேயே செய்யலாம் -பிரட் பீசா!

எண்ணெய் நன்கு பிரிந்த பிறகு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், சீரக தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்றாக கிளறி விடவும்.  இப்போது அதில் நாம் வேக வைத்து எடுத்துள்ள கருப்பு உளுந்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கிளறி விடவும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து , pan ஐ மூடி போட்டு சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின் இதனுடன் பட்டர் சேர்த்து நன்கு கலந்து, இறக்குவதற்கு முன் கொஞ்சம் மல்லி தழையை தூவி கொஞ்சம் கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். அதன் பின் மேற்பரப்பில் சிறிது fresh cream ஐ சேர்த்தால் சுட சுட , சுவையான மற்றும் ஆரோக்கியமான தால் மக்கனி ரெடி! 

இதனை சப்பாத்தி அல்லது நாணுடன் சுட சுட வைத்து தொட்டு சாப்பிடலாம். கட்டாயம் ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios