காஷ்மீரின் பாரம்பரியமான கான் சர்பத் நம் வீட்டில்லேயே எளிமையாக செய்வது எப்படி! பார்க்கலாம் வாங்க
வாருங்கள் ! சுவையான ‘கான் சர்பத்’ வீட்டில் எப்படி சுலமபாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் அதிகமானோர் புத்துணர்ச்சி மற்றும் உற்சாகமாக இருக்க தேநீர் அல்லது காபி போன்றவற்றை செய்து பருகி இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு குளிர் பானம் பார்க்க உள்ளோம்.
வழக்கமாக நாம் பாதாம் மில்க், ரோஸ் மில்க், போன்றவற்றை அதிகளவில் செய்து குடித்து இருப்போம். இன்று நாம் சற்று வித்தியாசமாக காஷ்மீரின் பாரம்பரியமான மற்றும் பிரசித்தி பெற்ற ஒரு பானத்தை காண உள்ளோம். இந்த பானம் காஷ்மீர் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் அநேக இடங்களில் கிடைக்கிறது. இது வட்டார மொழியில், ‘கான் சர்பத்’ என்று அழைப்பர்.
வாருங்கள் ! சுவையான ‘கான் சர்பத்’ வீட்டில் எப்படி சுலமபாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டி பால் -1/2 லிட்டர்
சப்ஜா விதை - 25 கிராம்
முந்திரி-10 கிராம்
பாதாம் மற்றும் பிஸ்தா - 25 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
சில்லி சிக்கனை மிஞ்சும் சுவையில் சில்லி மீல் மேக்கர் !
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதைகளை போட்டுக் கொன்டு அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். முந்திரி, பாதாம்,பிஸ்தா ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பாலில் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். பால் நன்றாக காய்ந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.
ஊற வைத்துள்ள சப்ஜா விதைகளை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும். பால் ஆறிய பிறகு சப்ஜா விதைகளை பாலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும்.
இப்போது பாலில் துருவி வைத்துள்ள தேங்காய், பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக குங்கும பூ சேர்த்து பிரிட்ஜில் சுமார் 6 மணி நேரம் வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் பிறகு, பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ஒரு சிறிய பௌலில் ஊற்றி பருகினால் சூப்பரான சுவையில் காஷ்மீர் புகழ் கான் சர்பத் ரெடி!