சில்லி சிக்கனை மிஞ்சும் சுவை! - "சில்லி மீல் மேக்கர்"!

சுவையான சில்லி மீல் மேக்கர் வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Chilli Meal Maker in Tamil

மழை பெய்யும் நேரத்தில் சுட சுட சுவையான ஒரு உணவை சாப்பிட கொடுத்தால் யாரேனும் வேண்டாம் என்று சொல்லுவார்களா என்ன? வீட்டில் மீல் மேக்கர் இருந்தால் இந்த ரெசிபியை ஈஸியாகவும் சூப்பராகவும் செய்யலாம்.

சில்லி சிக்கன்,சில்லி இட்லி,சில்லி பரோட்டா போன்ற வரிசையில் சில்லி மீல் மேக்கரை செய்து பாருங்கள்.சூப்பராக இருக்கும் இதன் சுவை காரணமாக அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். 

சிக்கனை ஒப்பிடுகையில் மீல் மேக்கர் விலை குறைவாக இருந்தாலும் சுவை மற்றும் சத்தில் சிக்கனுக்கு நிகராக இருக்கும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். அடிக்கடி இதனை செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும். மேலும் வீட்டில் கெஸ்ட் வந்தால் சட்டென்று இதனை செய்து கொடுத்து அசத்தலாம்.

சுவையான சில்லி மீல் மேக்கர் வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

பெரிய வெங்காயம் - 1 
கேப்ஸிகம்-1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறியது) 
வினிகர் - 2 ஸ்பூன் 
ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 
க்ரீன் சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 
டொமேட்டோ கெட்சப் - 2 ஸ்பூன் 
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - -தேவையான அளவு 
சர்க்கரை - 1 டீஸ்பூன் 

ஊற வைக்க:
.
மீல் மேக்கர் - 3 கப் (வேக வைத்தது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
கார்ன் பிளார் - 3 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு 

ருசியான மசாலா சப்பாத்தி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!

செய்முறை: 

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் கொதிக்கும் நீரில் மீல் மேக்கரை போட்டு, சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து கொள்ள வேண்டும். ஆறிய பிறகு அதனை வடிகட்டி அதில் இருக்கும் தண்ணீரை கைகளால் பிழிந்து விட்டு தனியாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பௌலில் மீல் மேக்கரை சேர்த்து அதில் கார்ன் பிளார்,இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, மீல் மேக்கரைப் சேர்த்து சிவக்கும் வரை பொரித்து எடுத்துக் கொண்டு அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில் வெங்காயம், சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும் . பின் கேப்ஸிகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கி விட வேண்டும். 

இப்போது க்ரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ்,டொமேட்டோ கெட்ச் சப், வினிகர், சோயா சாஸ்,சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, பின் பொரித்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து வதக்கி விட்டால், சுவையான சில்லி மீல் மேக்கர் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios