Kerala Special ; கேரளா ஸ்பெஷல் தித்திப்பான உண்ணியப்பம்! - ஈசியா செய்யலாம் வாங்க!

கேரளா உணவு வகைகளில் மிகவம் பிரபலமான ஒரு இனிப்பு வகை என்றால் அது உண்ணியப்பமாகும். இது கேரளாவின் பாரம்பரிய உணவு வகைளில் முக்கியமான ஒரு ரெசிபி ஆகும்

How to make Kerala Special Unni Appam in Tamil

கேரளா என்றவுடன் நம் அனைவருக்கும் தெரிந்தது சோட்டாணிக்கரை பகவதி அம்மன் திருக்கோவில், குருவாயூர் திருக்கோவில் ஆகும். அடுத்து கேரளா சென்றவுடன் நம் அனைவருக்கும் தெரிந்தது என்றால் அது மிக பிரபலமான நேந்திரம் சிப்ஸ் தான். இதனை அடுத்து கேரளா உணவு வகைகளில் மிகவம் பிரபலமான ஒரு இனிப்பு வகை என்றால் அது உண்ணியப்பமாகும். இது கேரளாவின் பாரம்பரிய உணவு வகைளில் முக்கியமான ஒரு ரெசிபி ஆகும். இப்பணியாரத்தை கொட்டாரக்கரயில் அமைந்துள்ள மகாகணபதி கோவிலில் நெய்வேத்தியமாக இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வாழை பழம் மற்றும் வெள்ளம் சேர்ப்பதால் இதன் இனிப்பு சுவையானது தித்திப்பாக இருக்கும். 

இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை நீங்கள் மாலை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை ஸ்னாக்ஸாக செய்து தரலாம். அல்லது பள்ளிக்கு செல்லும் போது ஸ்னாக்ஸ் பாக்ஸிலும் கொடுத்து அனுப்பலாம். நெய் சேர்த்து செய்வதால் இதன் மனமும், சுவையும் மிக நன்றாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Moong Dal Laddu : அனைவருக்கும் ரைட் சாய்ஸ் மூங் தால் லட்டு!

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி - 1 கப் 
வெல்லம் - 1/2 கப் 
வாழைப்பழம் - 1 
தேங்காய் துண்டுகள் - சிறிது 
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை 
நெய் - தேவையான அளவு 

Mirchi bajji : ஆந்திராவின் ஸ்பெஷல் - ஸ்ட்ரீட் புட் மிரப்பகாய் பஜ்ஜி செய்வோமா?

செய்முறை:

முதலில் பச்சரிசியை கழுவி நன்றாக சுத்தம் செய்து, அதை வெயிலில் காய வைத்த பின், மிக்ஸியில் போட்டு நைஸான மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம் சேர்த்து , பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து,சூடு செய்து பாகு போல் வந்தவுடன்,ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவுடன் இந்த வெல்ல பாகினை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் பிசைந்த வாழைப்பழம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து, அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து, ஓரளவு கெட்டியாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு அகன்ற வாணலியை வைத்து , நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை மிதமாக வைத்துகொண்டு, மாவை அப்பங்களை போல் போட்டு ஒரு புறம் பொறித்த பின் திருப்பி போட்டு மறுபுறமும் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்ளோ தான் தித்திப்பான கேரளா உண்ணியப்பம் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios