Mirchi bajji : ஆந்திராவின் ஸ்பெஷல் - ஸ்ட்ரீட் புட் மிரப்பகாய் பஜ்ஜி செய்வோமா?

ஆந்திராவின் ஸ்பெஷல் மற்றும் மிக பிரபலமான மிரப்பகாய் பஜ்ஜியை தான் பார்க்க போகிறோம்.

How to make Andra Special Mirchi Bajji in Tamil

மழை காலத்தில், மாலை நேரத்தில் சூடான டீயுடன் சுட சுட ஒரு பஜ்ஜி அல்லது வடை சாப்பிட்டால் ,எப்படி இருக்கும்? அருமையாக இருக்கும் அல்லவா! அதே பஜ்ஜியை சற்று வித்தியாசமான சுவையில் சாப்பிட்டால்? ஆமாங்க நாம் பஜ்ஜியில், வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி என்று பல வகை சாப்பிட்டு இருப்போம். அதேபோல் பொதுவாக நாம் பஜ்ஜியை சுட்டு அப்படியே சாப்பிடுவோம். ஆனால் ஆந்திராவில் சற்று வித்யாசமாக பஜ்ஜியின் உள்ளே ஒரு ஸ்டப்பிங் வைத்து சாப்பிடுவார்கள். அதனை ருசித்து பார்த்தவர்களுக்கு தான் அதன் ருசி என்னவென்று தெரியும். என்ன ஸ்டப்பிங் , என்ன பஜ்ஜி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆந்திராவின் ஸ்பெஷல் மற்றும் மிக பிரபலமான மிரப்பகாய் பஜ்ஜியை தான் பார்க்க போகிறோம். ஆந்திராவின் அனைத்து தெருக்களிலும் உள்ள கடைகளிலும் இந்த பஜ்ஜிக்காக வெயிட் பண்ணி வாங்கி சாப்பிட்டு செல்வார்கள். ஆந்திராவின் ஸ்பெஷல் மிரபகாய பஜ்ஜி செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Punjabi Bhature : பஞ்சு போல் இருக்கும் பஞ்சாபி ஸ்பெஷல் பட்டூரே!

தேவையான பொருட்கள்:

3 - பஜ்ஜி மிளகாய் 
ஒரு கப் - பஜ்ஜி மாவு
2 ஸ்பூன் - நிலக்கடலை
2 ஸ்பூன் - ஜீரகம்
1ஸ்பூன் - மிளகாய்தூள்
புளி - சிறிதளவு
1பல் - பூண்டு
ஒரு கப் - வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
ஒரு கொத்து - கறிவேப்பிலை 
தேவையான அளவு - மல்லி இலை
தேவையான அளவு- எண்ணெய் 
தேவையான அளவு - உப்பு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் சீரகம் மற்றும் நிலக்கடலை சேர்த்து லைட்டாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் வறுத்த நிலக்கடலை , சீரகத்தை மிக்ஸி ஜாரில் பூண்டு , சிறிது மிளகாய்தூள் , கொஞ்சம் புளி மற்றும் உப்பு சேர்த்து பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும். மிளகாயை நீளவாக்கில் வெட்டி அதில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு அதில், அரைத்த பவுடரை வைக்கவும்.

Sweetcorn Chicken soup : சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்!

பஜ்ஜி மாவை நீர் சேர்த்து கரைத்து வைத்துள்ள கப்பில் மிளகாயை போட்டு பிரட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயார் நிலையில் இருக்கும் வைத்த மிளகாயை ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும். ஒரு பெரிய தட்டில் பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது லெமன் ஜூஸ், சிறிது உப்பு மற்றும் சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து எடுத்து கொள்ள வேண்டும். 

பொரித்தெடுத்த மிளகாய் பஜ்ஜியை கத்தியால் கீறி விட்டு , அதில் கலக்கி வைத்துள்ள வெங்காயத்தை ஸ்டப்பிங் செய்து சாப்பிட்டால், அருமையான ஆந்திராவின் மிரபகாய பஜ்ஜி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios